CITU strike : மக்களே 10 ஆம் தேதி ஸ்தம்பிக்க போகுது தமிழகம்.. நடு ரோட்டுல மாட்டிகாதிங்க..

By Ezhilarasan BabuFirst Published Dec 8, 2021, 10:59 AM IST
Highlights

டிசம்பர் 10 ஆம் தேதி பகல் 12 மணி முதல் 12.10 மணி வரை 10 நிமிடங்கள் வாகனங்களை ஆங்காங்கே சென்று கொண்டிருக்கும் இடங்களில் அப்படி அப்படியே நிறுத்தி எதிர்ப்பு காட்டுமாறு வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகளையும் கேட்டுக்கொள்கிறோம். 

தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து டிசம்பர் 10ஆம் தேதி மாநிலம் முழுவதும் 10 நிமிடம் வாகன நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். டிசம்பர் 10 அன்று பிற்பகல் 12 மணி முதல் 12. 10 மணி வரை 10 நிமிடங்கள் வாகனங்களை ஆங்காங்கே இருக்கும் இடத்திலேயே நிறுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அப்படி நிறுத்தும் பட்சத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால் இது போக்குவரத்து போலீசாருக்கு அதிக தலைவலியை ஏற்படுத்தும் போராட்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. இந்த போராட்டத்தின் மூலம் எளிதில் மத்திய அரசின் கவனத்தையும் ஈர்க்க முடியும் என சிஐடியூ இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. 

இது தொடர்பாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு:- பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை ஏற்றமும், அதனால் ஏற்படும் இதர பொருட்களின் விலையேற்றமும் ஏழை நடுத்தர குடும்பங்களை அழித்து விட்டது. இந்திய பொருளாதாரத்தையும் சரிந்துவிட்டது. பெட்ரோலிய பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயிப்பதை மாற்றி சந்தை விலையோடு இணைத்த போது,  கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பலன் மக்களுக்கு கிடைக்கும் என்றார்கள். ஆனால் கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்து போதும்கூட மத்திய அரசு கலால் வரியை ஏற்றி அந்த பலனை தானே அபகரித்துக் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூபாய் 33, ஒரு லிட்டர் டீசலில் கலால் வரி ரூபாய் 32ம் வசூலிக்கப்படுகிறது. 

இதுபோக மாநில வரிகள் மத்திய அரசின் சிறப்பு தீர்வை வசூலிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு ஒரு வருடத்தில் ரூபாய் 600 லிருந்து 915 ஏற்றப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த 2014இல் கலால் வரி மூலம் அரசிற்கு கிடைத்தது ரூபாய் 99 ஆயிரம் கோடி, தற்போது கலால் வரி மூலம் கிடைத்துள்ள. ஆண்டு வருமானம் ரூ 1.73 லட்சம் கோடி, ஏழு வருடங்களில் கலால் வரி வருமானத்தில் 277 சதவீத உயர்வு. இப்படி மக்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் தான் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி இழைக்கப்படுகிறது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 65 க்கும் டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ரூபாய் 55 குறைக்க வேண்டும். சமையல் எரிவாயுவை 500 க்கும் கீழ் குறைக்க வேண்டும், பாகிஸ்தான் பங்களாதேஷில் கூட இவ்வளவு விலை இல்லை, நம்மிடம் பெட்ரோலியத்தை வாங்கி விற்க நேபாளத்தில் கூட பெட்ரோலிய விலை நம்மை விட குறைவு. பெட்ரோல் விலை சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தும் விதமாக சிஐடியு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து 10 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.

டிசம்பர் 10 ஆம் தேதி பகல் 12 மணி முதல் 12.10 மணி வரை 10 நிமிடங்கள் வாகனங்களை ஆங்காங்கே சென்று கொண்டிருக்கும் இடங்களில் அப்படி அப்படியே நிறுத்தி எதிர்ப்பு காட்டுமாறு வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகளையும் கேட்டுக்கொள்கிறோம். அனைத்து ஜனநாயக இயக்கங்களும் அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம். சென்னையில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இது தொடர்பாக  7-12-2020 1 அன்று சிஐடியு தமிழ்நாடு மாநில குழு மாநில தலைவர் சவுந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது மாநில பொதுச் செயலாளர் சுகுமாரன், உதவி பொதுச்செயலாளர் ரவிகுமார், திருச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மத்திய அரசுக்கு எதிராக சிஐடியூ அறிவித்துள்ள இந்த போராட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏனெனில் சென்னை போன்ற பெருநகரங்களில் சாலையில் 10 நிமிடங்கள் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படும் பட்சத்தில் அது கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த கூடும். இது போக்குவரத்து போலீஸாருக்கு போக்குவரத்தை சீர் செய்வதில் மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதே நேரத்தில் இந்த போராட்டத்தின் மூலம் நேரடியாக பொதுமக்களின் கவனத்தை பெற முடியும் எனவே சாலைகளில் வாகனத்தை நிறுத்தவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என சிஐடியு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!