டிடிவிக்கு ஆரம்பிச்சிடுச்சு...! 500 குக்கர்களை அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்..! 

 
Published : Dec 11, 2017, 07:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
டிடிவிக்கு ஆரம்பிச்சிடுச்சு...! 500 குக்கர்களை அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்..! 

சுருக்கம்

Police detained over 500 cooks in a cisquit at Cassemouth in Chennai.

சென்னை காசிமேட்டில் வாகன தணிக்கையில் 500 குக்கர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கும்மிடிப்பூண்டியில் இருந்து குக்கர்கள் கொண்டு வருவதாக ஓட்டுநர் தெரிவித்தாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். 

தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.

இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆர்.கே.நகரில் நேர்மையாக தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் ரத்து செய்து விட்டு செல்லுங்கள் என பாஜக தமிழிசை தெரிவித்து வருகின்றார். 

மேலும் எதிர்கட்சிகளும் கடும் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது. 

இதைதொடர்ந்து சென்னை காசிமேட்டில் வாகன தணிக்கையில் 500 குக்கர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கும்மிடிப்பூண்டியில் இருந்து குக்கர்கள் கொண்டு வருவதாக ஓட்டுநர் தெரிவித்தாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!