
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் போயஸ் கார்டன் வருகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீபாவின் கணவர் மாதவனை உள்ளே அனுமதிக்கும் காவல்துறையினர், தங்களை அனுமதிக்காதது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து வாக்குவாதம் நடத்தினர்.
இருப்பினும் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், காவல்துறையினரைக் கண்டித்து போயஸ் கார்டனின் பிரதான வாயிலில் அமர்ந்து பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும் அங்கு குவிந்து வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போயஸ் கார்டன் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
போயஸ் கார்டன் பகுதியின் பிரதான வாயில்களில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கார்டன் பகுதியில் இருக்கும் வீட்டின் உரிமைாயாளர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரியாமல் அங்கு வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பபட்டு வருகிறது.