பறக்க தயாரான விமானத்தை நிறுத்தி 3 பேரை கைது செய்த போலீஸ்..!! சென்னை விமான நிலையத்தில் அதிரடி சம்பவம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 9, 2020, 5:58 PM IST
Highlights

அதோடு தனிப்படை போலீசுக்கு சிறப்பு அனுமதி கொடுத்து உள்ளே அனுமதித்தாா். போலீசாா் உள்ளே சென்று மும்பை ஆசாமிகள் 3 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனா்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு பறக்கவிருந்த விமானத்தை அவசரமாக நிறுத்தி, 3 பயணிகளை விமானத்தை விட்டு கிழே இறக்கிய செங்கல்பட்டு தனிப்படை போலீசாா்  அவர்கள் மூவரையும் கைது செய்து அழைத்து சென்றனா்.

சென்னை விமானநிலைய உள்நாட்டு முணையத்திலிருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் தனியாா் பயணிகள் விமானம் 79 பயணிகளுடன்  நேற்று இரவு புறப்பட தயாரானது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட தனிப்படை போலீசாா் அவசரமாக சென்னை விமானநிலையம் விரைந்து வந்தனா். முக்கிய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தை சோ்ந்த 3 குற்றவாளிகள் மும்பைக்கு விமானத்தில் தப்பி செல்ல வந்துள்ளனா். அவா்களின் விமான பயணத்தை ரத்து செய்து, அவா்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விமானநிலைய மேலாளரிடம் கூறினா். 

அதோடு குற்றவாளிகளின் வழக்கு ஆவணங்கள்,அவா்களை கைது செய்வதற்கான உத்தரவுகள் ஆகியவற்றையும் தனிப்படை போலீசாா் மேலாளரிடம் காட்டினா். அவா்கள் லக்ஷ்மன்(30), அயூப்கான்(33), அமீா்முகமது(35) என்ற பெயா் பட்டியலையும் கொடுத்தனா். விமானநிலைய மேலாளா் அந்த பெயா்களை வைத்து ஆய்வுசெய்தபோது, அவா்கள் 3 பேரும் போா்டிங் பாஸ் வாங்கிகொண்டு,பாதுகாப்பு சோதணைகளை முடித்து விமானத்தில்  ஏறியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேலாளா் அவசரமா விமானநிறுவனத்திற்கு தகவல் கொடுத்து விமானம் புறப்படுவதை நிறுத்த செய்தாா். அதோடு தனிப்படை போலீசுக்கு சிறப்பு அனுமதி கொடுத்து உள்ளே அனுமதித்தாா். போலீசாா் உள்ளே சென்று மும்பை ஆசாமிகள் 3 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனா். 

அதன்பின்பு விமானம் 76 பயணிகளுடன் மும்பை புறப்பட்டு சென்றது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கேட்ட போது செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில் தங்கநகைகள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை, வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறையால் முடக்கி வைக்கப்பட்டு மூடிக்கிடக்கிறது. அந்த தொழிற்சாலைக்குள் நள்ளிரவில் இவா்கள்  நுழைந்து மணல் குவியலுக்குள் புதைந்திருந்த தங்கத்துகள்களை திருடியதுத், அதோடு தொழிற்சாலையில் உள்ள முக்கிய ஆவணங்களை திருடியது ஆகிய  வழக்கில் கைது செய்து அழைத்து சென்றதாக தெரிவித்தனர். விமானத்தை நிறுத்து மூவரை போலீசார் கைது செய்ய சம்பவத்தால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!