"ஆண்டாள் குறித்த சர்ச்சை பேச்சும், வாங்கி கட்டிக்கொண்ட எதிர்வினைகளும்..." வாட்ஸ் ஆப்பிள் அதிரி புதிரி!

Asianet News Tamil  
Published : Jan 12, 2018, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
"ஆண்டாள் குறித்த சர்ச்சை பேச்சும், வாங்கி கட்டிக்கொண்ட எதிர்வினைகளும்..." வாட்ஸ் ஆப்பிள் அதிரி புதிரி!

சுருக்கம்

poet Vairamuthus speech on seventh-century mystic Andal sparks controversy

அது என்னதான் ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேசினார் என தெரியவில்லை கடந்த சில நாட்களாக எனது வாட்ஸ் ஆப் குருப்பில் உள்ளவர்கள் வைரமுத்துவை  டீசன்ட்டான வார்த்தைகளால் சொர்ப்பொழிவாற்றி வருகிறார்கள்.

சரி, அப்படி என்ன பேசினார்?  இணையத்தில் கூகுள் செய்து பார்த்தேன்.  கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் “ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.” என்று ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். அத்துடன் இந்தக் தகவலை, அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல் ஒன்றில் ஆண்டாள் குறித்து எழுதப்பட்டுள்ள குறிப்பு என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கருத்துக்களை திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் வைரமுத்து குறிப்பிட்டு  கூறியிருந்தார் என இருந்தது.  வைரமுத்துவின் இந்த கருத்துக்கு, மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் எதிர்ப்பு என்ற பெயரில் அரசியல் நாகரீகம் இல்லாமல் இப்படியா பேசுவார் அய்யோ முடியலடா சாமீ என ஆனது. ஆண்டாளை தவறாக பேசியுள்ள வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பெரும் எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும்  என கூறியிருந்தார் இப்படி ஏதாவது சொல்லியிருந்தால் பரவாயில்லை. மேடையில் ஒருவரை தரக்குறைவாக பேசுவது அவரை திட்டுவதல்ல இவரின் தரத்தை இவரே இப்படி குறைத்து தரமில்லாமல் பேசியிருப்பது ரொம்ப வேதனை...

ஆண்டாள் குறித்த பேச்சும், எதிர்வினைகளும்... வாட்ஸ் ஆப்பிள் வரும் கருத்து இதோ;

கவிஞர் வைரமுத்து அவர்கள் ஆண்டாளைக் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை தவிர்த்து இருக்கலாம். அந்த பேச்சு அவசியமற்றது. அந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அவரும் வருத்தம் தெரிவித்து இருக்கின்றார். ஆண்டாளின் பாடல்களில் குறிப்பாக திருப்பாவையில் மற்றைய மத, கடவுள் நிந்தனை ஏதும் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அற்புதமான தமிழில் படைத்த பாவைப் பாடல்களை நாம் மெச்ச வேண்டுமேயொழிய தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பி ஆரோக்கியமற்ற நிலைக்கு சமுதாயத்தை இழுத்துச் செல்லக் கூடாது.

இந்நிலையில் , பாஜகவின் எச்.ராஜாவின் பேச்சு அருவருக்கத்தக்கது. பொதுவாழ்வுக்கு வந்தவர், பொது தளத்தில் உரையாற்றுவோம் கண்ணியத்துடன் வார்த்தைகளை கையாள வேண்டும். அவருடைய பேச்சு மனிதநேயமற்றது. வேதனையை தருகிறது. ஆண்டாள் மார்கழி முன்பனி, பின்பனிக் காலத்தில் கூடியிருந்து குளிரச் சொல்லி இருக்கிறார். கடுமையான வெப்பத்தில் கடுஞ்சொற்களால் ஆடச் சொல்லவில்லை. இதற்குத் தொடர்பு இல்லாத அவர் குடும்பப் பெண்களை இழுப்பது, கேவலமாகப் பேசுவது போன்றவைகளை எல்லாம் வெறிப் பிடித்த செயல்கள். இன்னொன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். எச். ராஜாவின் நடவடிக்கையும், அவரது போக்கும் பிடிக்கவில்லை. அதற்காக ஆண்டாளை விமர்சித்துப் பேசுவதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பெரியாரும் – இராஜாஜியும், காமராசரும் - ஜீவாவும் எதிரெதிர் தளத்தில், மாற்று கொள்கைகளுடன் இருந்தாலும் ஒருவருக்கொருவர்  நல்ல நண்பர்களாகவும் புரிந்து கொண்டவர்களாகவும் இயங்கினர். அறிஞர் அண்ணாவும் - கலைஞரும் முதலமைச்சர் காமராசரை தங்களின் தொகுதிக்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகளில் பங்களிக்க செய்து கெளரவித்தார்கள். இப்படியெல்லாம் அரசியல் அறம் தழைத்த தமிழகத்தில் இன்று தறுதலைகளும்,  மறைந்த தலைவர்களைப் பற்றித் தரம் தாழ்ந்துப் பேசுவது வரலாற்று காட்சிப்பிழைகளாக ஊடக வெளிச்ச தாகத்திற்காக விக்கல் ஒலி எழுப்புகின்றார்கள். அவர்களின் உரைக்கு அகராதியில் பொருள் தேட முடியாது. பொது வாழ்வில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு பாசாங்குப் பிழைகளோடு வயிற்றுப் பிழைப்புக்கு பொருள் தேடலாம்.

அரசியல் அடிப்படை நாகரீகம் தெரியாத இவர்களுக்கு எல்லாம் பாடம் கற்பித்தாக வேண்டியது கட்டாயம். இவர்களுடைய குரல்வளையை கருத்து சுதந்திரம் என பாராமல் நெறிக்க வேண்டும். இவர்களை எல்லாம் பொதுத்தளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அடிப்படை நாகரீகமற்ற  இந்தக் காட்சிப் பிழைகளும், தோற்றப்பிழைகளும் சலசலப்பை ஏற்படுத்தி அரிதாரம் பூசிக்கொண்டு முகம் காட்டும் அருவருக்கத்தக்க மனிதர்களை தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு ஒரு பதிவு உலாவருகிறது.

PREV
click me!

Recommended Stories

நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!