
வெளிநாடுகளில் விற்கப்படும் முதல்பால், ஆவின்பால்தான் என்றும் சிங்கப்பூரில் 80 இடங்களில் ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
சட்டப்பேரவையில், எம்.எல்.ஏ. ரவிசந்திரன், அரியலூர், கீழ்ப்பழுவூர், ரெட்டிப்பாளையம், தளவாய் ஜெயம்கொண்டான், ஆண்டிமடம் மற்றும் செந்துறை ஆகிய பகுதிகளில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா கேள்வி எழுப்பினார்.
எம்.எல்.ஏ. ரவிசந்திரனின் கேள்விக்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் பாலாஜி, ஆண்டிமடம் மற்றும் செந்துறை ஆகிய பகுதிகளில் ஆவின் பாலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். மேலும், கூடிய விரைவில் பாலகம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் விற்கப்படும் முதல் பால், ஆவின்பால்தான் என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். சிங்கப்பூரில் 80 இடங்களில் ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.