வட மாவட்டங்களில் பாமக வாக்கு வங்கியை அடித்து துவம்சம் பண்ண திமுக... இனி கூட்டணி டீல்க்கே ஆப்படித்த தரமான சம்பவம்!!

By sathish kFirst Published May 27, 2019, 5:12 PM IST
Highlights

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக பிஜேபி கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு கூட்டணியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகனைத் தவிர மற்ற வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. சில தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் இருந்தது, அதேபோல பாமகவில் அன்புமணி முன்னிலை வகித்தார். ஆனால் தேமுதிகவின் நிலையோ பரிதாபம், நின்ன 4 தொகுதியிலும் ஒரு ரவுண்டில் கூட நாம முன்னிலைன்னு செய்தி வராத தரமான சம்பவம் நடந்தது. 

இதனால், அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் முடிவுகள் ரொம்பவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தைலாபுரத்தில் இருந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தர்மபுரியில் இருந்த அன்புமணியிடம் அடிக்கடி நிலவரத்தை விசாரிச்சிக்கிட்டே இருந்துள்ளார். அங்கே ஏறி ஏறி இறங்கி, பின்னோக்கிப் போன அன்புமணியின் நிலவரம், அவர் குடும்பத்தினரை மாதியான சாப்பாடு கூட சாப்பிடாமல் டிவி முன்னாடியே உட்கார்ந்து அப்செட்டாக்கி இருந்ததாக ஒரு தகவல் வந்தது. 

மேலும், தைலாபுரம் அடங்கிய விழுப்புரம் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமார் தொடக்கத்திலிருந்தே முன்னணியிலேயே இருந்ததை பாமக நிறுவனர் ராமதாஸால் ஜீரணிக்க முடியலை. பாமக வேட்பாளரான வடிவேல் ராவணனைத் தொடர்புகொண்டு, விவரம் கேட்டிருக்காரு. சிறுத்தை வேட்பாளருக்கு தி.மு.க. ஓட்டு முழுமையா விழுந்திருக்கு. 

ஆனால் நமக்கு அதிமுக. ஓட்டுகள் முழுசா விழலை. நாம களமிறங்கிய அந்த 7  தொகுதியிலும் அவங்க நமக்கு  வேலை பார்க்கல என சொல்லியிருக்கார். இதற்கு பதிலளித்த ராமதாஸோ, இடைத் தேர்தல் நடக்கும் 22 தொகுதியில், 8 தொகுதி,  நம் செல்வாக்குள்ள வட மாவட்டங்கள்ல இருக்கு. அதனால் இவற்றில் நம்ம பலத்தில் ஜெயிப்போம்னுதான் எடப்பாடி நம்மைக் கூட்டணியில் சேர்த்துக்கிட்டார். இப்ப வெட்கக்கேடா இருக்கு, இதெல்லாம் திமுகவின் வியூகம் தான், அவங்களுக்கு கூட்டணி கட்சியை ஜெயிக்க வைக்கணும் என்கிறதையும் தாண்டி பாமகவை தோற்கடிக்கணும் என்பது தான் அவங்க பிளான் என்று புலம்பித் தள்ளினாராம்.  

ஆனால், அடுத்த எலக்ஷனில் இப்படியெல்லாம் சொல்லி கூட்டணி டீல் பேசினால் நம்புவார்களா? இப்படி முதலுக்கே மோசம் செய்துவிட்டதே அதிமுக என பாமக வட்டாரத்தில் இதே பேச்சாகவே இருக்கிறது.

click me!