’என்னை ஜெயிக்க வைத்ததே அதிமுக தான்...’ எடப்பாடியாரை கதறடிக்கும் திருநாவுக்கரசர்..!

Published : May 27, 2019, 04:30 PM IST
’என்னை ஜெயிக்க வைத்ததே அதிமுக தான்...’ எடப்பாடியாரை கதறடிக்கும் திருநாவுக்கரசர்..!

சுருக்கம்

தான் வெற்றி பெற்றதற்கு அதிமுகவினரே காரணம் என திருச்சி காங்கிரஸ் கட்சி எம்.பி., திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.   

தான் வெற்றி பெற்றதற்கு அதிமுகவினரே காரணம் என திருச்சி காங்கிரஸ் கட்சி எம்.பி., திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக திருச்சி தொகுதியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டு சுமார் 4.59 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


 
இதனையடுத்து அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’ திருச்சி மக்களவை தொகுதியில் இதுவரை அதிமுக மட்டும் தான் 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், இந்த முறை நான் 4.59 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன். அதிமுக.,வின் வாக்கு வங்கியாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கூட இந்த முறை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கை சின்னத்திற்கு கிடைத்துள்ளது. அதே போல புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிகமான வாக்குகள் எனக்கு கிடைத்துள்ளது.

அதாவது உண்மையான அதிமுக தொண்டர்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள். நடுநிலையாளர்களும் எனக்கே வாக்களித்து உள்ளனர். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தவிர அதிமுகவில் உள்ளவர்களும் எனக்கு வேண்டிய, எனக்கு பழக்கமான, என் நீண்ட நாள் நண்பர்கள் என பலர் மற்றும் ஏராளமான அதிமுகவினரும் எனக்கு வாக்களித்துதான் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். அதிமுக தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து இருந்தாலும் இங்கு உள்ளவர்கள் தேமுதிக வேட்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் தான் எனக்கு வெற்றி வாய்ப்பு சரியாக இருந்தது.

பிற மாநிலங்களில் ஒரு சீட்டு கூட பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என காங்கிரஸ் கட்சி ஆராயும். எதிர்க்கட்சியினர் பெற்றிருக்கும் வெற்றி உரிய முறையில் உள்ளதா? மீண்டும் வாக்குச் சீட்டு முறை சரியாக இருக்குமா? என்றெல்லாம் ஆராய வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழவில்லை என்றாலும் வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை போராடி, வாதாடி மக்களுக்கு பெற்றுத்தருவேன்’’ என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?