தம்பிதுரையையே நல்லா வச்சு செஞ்சிருக்காங்கன்னா பாருங்க... கொஞ்சம் யோசிக்கணும்! சிரிப்பு கிளப்பிய பாட்ஷா வில்லன்!!

By Arun VJFirst Published May 27, 2019, 4:52 PM IST
Highlights

அதிமுக பிஜேபியின் இந்த மெகா கூட்டணியில் அதிமுக சார்பில் ஒரே ஒரு வெற்றியாக தேனி தொகுதி மட்டுமே ஜெயித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் பேரம் பேசி கூட்டணி சேர்ந்த தேமுதிகவாகட்டும், வட மாவட்டங்களில் பலமான வாக்கு வங்கி இருக்கு என சொல்லி 7 தொகுதிகளை வாங்கி மொத்தமாக வாஷ் அவுட் ஆகியுள்ளது.
 

அதிமுக பிஜேபியின் இந்த மெகா கூட்டணியில் அதிமுக சார்பில் ஒரே ஒரு வெற்றியாக தேனி தொகுதி மட்டுமே ஜெயித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் பேரம் பேசி கூட்டணி சேர்ந்த தேமுதிகவாகட்டும், வட மாவட்டங்களில் பலமான வாக்கு வங்கி இருக்கு என சொல்லி 7 தொகுதிகளை வாங்கி மொத்தமாக வாஷ் அவுட் ஆகியுள்ளது.

இதெல்லாம் விட கொடுமை என்னனா? கடந்த முறை பிஜேபி தேமுதிக கூட்டணியில் ஜெயலலிதாவின் பேகா வியூகத்தையும் மீறி வென்ற அதே அன்புமணி இந்தமுறை, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டார். செந்தில்குமார் 5 லட்சத்து 74 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அன்புமணி 5 லட்சத்து 4 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

அதிமுக கூட்டணியிலுள்ள தேமுதிக, பாமக, பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் தேர்தல் கூட்டணி அமைத்தபோது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தப்படி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எப்படியாவது  தனக்கு வாங்கிவிடவேண்டும் என அன்புமணி பல வழிகளில் பிளான் போட்டு வருகிறார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஆனந்தராஜ், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்துமே பலவீனமான கட்சிகள். விஜயகாந்த் கட்சி எந்தக் கட்சியைவிட பலவீனமானது, பாமக கடைசி நேரத்தில் வந்தது, பாஜக தமிழகத்தில் எப்படி உள்ளது என்பதையெல்லாம் அதிமுக ஆராய வேண்டும். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரை அதிமுகவில் தோற்கிறார் என்றால் யோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அடுத்ததாக, வாங்கிய 7 தொகுதிகளில் பாமக  படு தோல்வியடைந்தது.தேர்தலுக்கு முன்பே அக்கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என பேசப்பட்டது. இப்போது பாமகவுக்கு அது கிடைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்.

இதனை தேர்தலுக்கு முன்பே சொன்னேன். இந்த அதிமுக வாக்கு, அதிமுகவுக்காக மக்கள் தந்த வாக்குகள். இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள். இதனை இன்னொரு கட்சிக்கு தாரை வார்க்கக்கூடாது. நம்முடைய வாக்கை வேறொரு கட்சிக்கு தாரை வார்த்து தருவதற்கான உரிமை நமக்கு இருக்கிறதா? அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என்னுடன் பேசினார்கள். 

கூட்டணி போட்டு தோற்ற அன்புமணிக்கோ அல்லது பாமகவில் வேறு யாருக்கோ ராஜ்ய சபா உறுப்பினர் பதவி தருகிறேன் என்று சொன்னதை உடனே வாபஸ் வாங்க வேண்டும். இது நம்முடைய உரிமை. நம்ம கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் இருக்கும் போது அதை என வேறொருவருக்கு கொடுக்கணும். அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள், அப்படி வேறு யாருக்கும் கொடுக்காதீர்கள் என்பது எனது அன்பான இவ்வாறு கூறினார்.

click me!