‘தருமபுரி மாவட்டத்திற்கு வேலைவாய்ப்பு இல்லாதது தான் மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல முதன்மை காரணம். தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
கேரள மாநிலம் திருவல்லாவில் இரு பெண்கள் கழுத்தை அறுத்து நரபலி கொடுக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக ஷாபி, ஆயுர்வேத மருத்துவர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முதல் நரபலி ஜூன் மாதம் தரப்பட்டுள்ளது. 2வது நரபலி செப்டம்பர் மாதம் தரப்பட்டுள்ளது. விசாரணையில் மருத்துவர் பகவல் சிங் கடனில் மிகுந்த சிரமப்பட்டுள்ளார். அப்போது, போலி பேஸ்புக் மூலம், ஷாபி அறிமுகமாகி, இருவரும் சந்தித்துப் பேசியது தெரியவந்தது.
இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக
இந்நிலையில், போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் சதைகளை வெட்டி சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஷாபியின் அறிவுறுத்தலின்படி, தம்பதிகள் நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாக கைதான லைலா அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வறுமை காரணமாக கேரளத்திற்கு சென்று பரிசுச்சீட்டு விற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் நரபலி தரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க..Alien : டிசம்பர் 8.! பெரிய விண்கல்லில் ஏலியன்கள் பூமிக்கு வரும்.. கணித்து சொன்ன டைம் ட்ராவலர் - சாத்தியமா ?
வறுமை காரணமாக கேரளத்திற்கு சென்று பரிசுச்சீட்டு விற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் நரபலி தரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.(1/3)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss)ழுத்தறிவு அதிகம் பெற்ற கேரளத்தில் தான் நரபலி போன்ற மூடநம்பிக்கைகளும், கொடூரங்களும் அதிகமாக நிலவுகின்றன. எந்த பின்புலமும் இல்லாமல் கேரளத்திற்கு வாழ்வாதாரம் தேடிச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும்.
தருமபுரி மாவட்டத்திற்கு வேலைவாய்ப்பு இல்லாதது தான் மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல முதன்மை காரணம். தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கொல்லப்பட்ட பத்மாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..2 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த விவகாரம்.. போலீசாருக்கு ஷாக் கொடுத்த திக் திக் நிமிடங்கள் !