கவுரவ விரிவுரையாளர்களில் 2000-க்கும் மேற்பட்டோருக்கு உரிய தகுதி இல்லை... அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Oct 12, 2022, 5:26 PM IST
Highlights

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் உரிய தகுதி இல்லாமல் இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் உரிய தகுதி இல்லாமல் இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். முன்னதாக பணி நிரந்தரம் செய்யக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்தது. இந்த நிலையில் அந்த அறிவிப்பு குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: 11 ஆயிரம் ஏக்கரில் முதல்முறையாக தமிழகத்தில் ”தேவாங்கு சரணாலயம்”.. எங்கு வரப்போகுது..? அறிவிப்பு

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக 4000 விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நியமிக்கப்பட இருக்கிறது. தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ  விரிவுரையாளர்கள் நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் வரை பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் விரிவுரையாளர் தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் நேர்முகத்தேர்வில் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை மதிப்பெண் வழங்கப்படும்.

இதையும் படிங்க: 

தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக பணியில் உள்ள 5600 நபர்களில் 2000க்கும் மேற்பட்டவர்கள் விரிவுரையாளர்களுக்கான தகுதி இல்லாமல் இருக்கின்றனர். இவர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே பணியில் தொடர முடியும். தற்போது 4 ஆயிரம் நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டாலும் எஞ்சியிருக்கும் 1875 காலி விரிவுரையாளர் இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுவார்கள் என்று தெரிவித்தார். 

click me!