அதிமுகவுக்கு கறி விருந்து... சொந்தக் கட்சிக்காரனுக்கு குஸ்கா கூட இல்ல... பாமக பொதுக்குழு கூட்ட பஞ்சாயத்து!!

By sathish kFirst Published Feb 24, 2019, 11:22 AM IST
Highlights

நேத்துதான் எடப்பாடி ஓபிஎஸ்ஸை கூப்பிட்டு விருந்து வச்சாரு டாக்டர். ஆனால் இன்னிக்கு சொந்தக் கட்சிகாரனையே பட்டினி போட்டு அனுப்புறாரே? இது என்ன நியாயம்! என தைலாபுர பஞ்சாயத்து வலைத்தளங்களில் மட்டுமல்ல திண்டிவனம் பஸ்டேண்டில் கூட டிஸ்கஷன் செய்கிறார்களாம் பாமகவினர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என்றும் பாமகவினருக்கு உள்ளாட்சிப் பதவிகள் கிடைக்கும் என்றும் ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்கிறார் அன்புமணி. ஆனால் அதிமுக தலைவர்களுக்கு தடபுடலாக விருந்து போட்ட தைலாபுரம் தோட்டம் பாமக தொண்டர்களுக்கு குஸ்கா கூட போடலை என தொண்டர்களுக்கு புலம்புகிறார்கள்.

பிப்ரவரி 19 ஆம் தேதி அதிமுக-பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, பிப்ரவரி 22 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுக்குத் தனது தைலாபுரம் தோட்டத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார் ராமதாஸ்.

அதன் பின் நேற்று பிப்ரவரி 23 ஆம் தேதி புதுச்சேரியில் பாமகவின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டினார். அதிமுக-பாமக கூட்டணி பற்றி பலத்த விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் பாமக நிர்வாகிகளுக்கு சில விஷயங்களை எடுத்துச் சொல்லும் வகையில் இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டது.

இக்கூட்டத்தில்  பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, அதிமுகவோடு கூட்டணி வைத்தது ஏன் என்று சுமார் 15 நிமிடங்கள் பேசி விளக்கினார். நேற்று பகல் 12 மணிக்கு துவங்கிய பொதுக்குழு 1.30க்கெல்லாம் முடிந்துவிட்டது. நேற்று இரவு அதிமுக தலைவர்களுக்கு தடபுடலாக விதவிதமாக கறி சோறு, வகைவகையாக மீன் வறுவல் என விருந்து வைத்த டாக்டர்ஸ் எப்படியும் கூட்டணி அமைத்த குஷியில்  பொதுக்குழு உறுப்பினர்களுக்கு உணவு வசதி ஏற்பாடு செய்திருப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தனர் பாமகவினர். கறி விருந்து வேண்டாம் தயிர் சாதம், லெமன் சாதம் கூட போடாமல் அனுப்பிவிட்டார்களாம். 

கடந்த டிசம்பர் மாதம் கோயமுத்துரில் நடந்த பொதுக் குழுவில் ரெண்டு நாளும் நல்லா சாப்பாடு போட்டாங்க. ஆனா கூட்டணி அமைச்சு இருக்குற இந்த சந்தோஷமான நேரத்துல இப்படி பண்ணிட்டாங்களே… நேத்துதான் எடப்பாடி ஓபிஎஸ்ஸை கூப்பிட்டு விருந்து வச்சாரு டாக்டர். ஆனால் இன்னிக்கு சொந்தக் கட்சிகாரனையே பட்டினி போட்டு அனுப்புறாரே? இது என்ன நியாயம் என பாமக தொண்டர்கள் திண்டிவனம் பஸ்டேண்டில் டிஸ்கஸ் பண்ணிக்கொண்டு இருந்தார்களாம்.

click me!