’எம்புள்ளையத்தான் கொன்னுட்டீங்க... எம்பேரனையாவது உசுரோட விட்ருங்கய்யா...’ கலங்கும் காடுவெட்டி குருவின் தாயார்..!

By Thiraviaraj RMFirst Published Mar 10, 2019, 1:02 PM IST
Highlights

’எம்புள்ளையத்தான் கொன்னுட்டீங்க... எம்பேரனையாவது உசுரோட விட்ருங்கய்யா...’ கலங்கும் காடுவெட்டி குருவின் தாயார்..!

’’என் மகனைத்தான் கொன்னுட்டீங்க.. அதேபோல என் பேரப்பிள்ளைக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது. அப்படி ஆபத்து வந்தால் அதுக்கு ஐயா வீட்டு ஆட்கள்தான் பொறுப்பு’’ என காடுவெட்டி குருவின் தயார் கல்யாணி அம்மாள் எச்சரித்துள்ளார்.  

காடுவெட்டி குரு மகன் கனலரசன், சகோதரி மீனாட்சி, தாயார் கல்யாணி அம்மாள் மூவரும் கூட்டாக சென்னையில் பேட்டியளித்தனர். அப்போது பேசிய கல்யாணி அம்மாள், ‘’காடுவெட்டி குரு அவனாகவே போய் ஆபரேஷன் செய்துகிட்டான். யாரோ ஒருத்தர் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார் அதைவைச்சு ஆபரேஷன் செஞ்சோம்.

என் மகனை கடைசியா எங்கே பார்த்தேன். அவன் தான் ஆஸ்பத்திரியிலேயே நிதானமில்லாமல் கிடந்தானே... கடைகட்டத்துல அவனை நான் பார்க்கவேயில்ல. அவனை எப்படியோ கொன்னுட்டாங்க. எம்புள்ளைக்கு வைத்தியம் பார்த்திருந்தால் அவனை காப்பாத்தி இருக்கலாம். ரொம்ப நாளைக்கு இல்லேனாலும் ரெண்டு, மூனு வருஷமாவது உயிரோடு இருந்திருப்பான். திட்டம்போட்டு கொன்னு எம்பிள்ளையை எங்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க.  எம்பிள்ளை செத்துக்கிடந்தப்ப பாமகவுல இருந்து வந்து ஒரு ஆறுதல் வார்த்தையை கூட ஒருத்தரும் சொல்லல. ராமதாஸ் குடும்பம் என்னை இன்னைக்கு வரை வந்து பார்க்கவும் இல்ல. பேசவும் இல்ல. 

சிங்கப்பூர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகலாம்னு கேட்டதுக்கு என் மகன் மறுத்துட்டதா பாமக நிர்வாகிகள் சொல்லிட்டாங்க. உங்ககிட்ட பணம் இருக்கானு என் குடும்பத்த்து ஆட்கள்ட்ட கேட்டிருக்காங்க. எப்படியோ என் மகனை கொன்னுட்டாங்க. அதேபோல என் பேரப்பிள்ளைக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது. அப்படி ஆபத்து வந்தால் அதுக்கு ஐயா வீட்டு ஆட்கள்தான் பொறுப்பு. என்னை அடித்து கொடுமை படுத்துறாங்க. எப்படித்தான் உயிர் வாழ்றதுனே தெரியல. இதுக்கெல்லாம் ஒரு நியாயம் கிடைக்காதா? ‘’ எனக் கண்னீர் வடிக்கிறார் கல்யாணி அம்மாள். 

click me!