தோல்விக்கு பின் கூட்டணி கட்சிகளை தவறாக பேசுவதை பொழப்பாக வைத்திருக்கும் பாமக.. அதிமுக புகழேந்தி விமர்சனம்.!

By vinoth kumarFirst Published Jun 13, 2021, 6:45 PM IST
Highlights

ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார். 

ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தல் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி;- பாமகவால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை. அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் பாமகவுக்கு எந்த விதமான வேலையும் இல்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து அன்புமணி ராமதாஸ் தேவையற்ற கருத்துக்களை கூறி வருகிறார். ஓபிஎஸ் அவர்கள் கையெழுத்து போட்டதால்தான் இன்று அதிமுக மூலமாக அன்புமணி மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். 

நல்லெண்ண அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. பாமக வலுவாக உள்ள பகுதிகளில் எல்லாம் முழுவதுமாக அதிமுக தோற்றுள்ளது. மற்ற தொகுதிகளில் ஏன் தோல்வி அடைந்தோம் என்பது பற்றி முதலில் பாமக ஆராய வேண்டும். எங்கள் தலைவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார்.

click me!