உள்ளாட்சித் தேர்தல்: கும்பகோணத்தில் திமுகவுக்கு ஆதரவு அளித்த பாமக... அதிமுகவை காண்டாக்கிய பாமக நிர்வாகிகள்!

By Asianet Tamil  |  First Published Dec 17, 2019, 7:22 AM IST

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இங்குள்ள 12-வது வார்டில் போட்டியிட பாமக விரும்பியது. தங்களுக்கு அந்த வார்டில் சீட்டு ஒதுக்க அதிமுகவை பாமக வலியுறுத்தியது. ஆனால், அந்த வார்டை தர அதிமுக மறுத்துவிட்டது. இதனால் பாமக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். தங்களுக்கு சீட்டு ஒதுக்காத நிலையில், அங்கே அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று பாமக நிர்வாகிகள் முடிவெடுத்தனர். 


கும்பகோணம் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட உள்ளூர் ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் புதுவிதமான காட்சிகள் எல்லாம் அரங்கேறும். ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் போட்டி வேட்பாளர்களாக களம் இறங்குவார்கள். கூட்டணி கட்சிகள் கழன்றுகொண்டு தனித்தனியாகப் போட்டியிடுவார்கள். உடன் இருந்தே காலை வாரிவிடுவார்கள். இப்படி உள்ளாட்சித் தேர்தலில் பல காட்சிகள் அரங்கேறும். அப்படியான ஒரு காட்சிதான் கும்பகோணத்தில் அரங்கேறியுள்ளது. இங்குள்ள கிழக்கு ஒன்றியம் உள்ளூர் ஊராட்சித் தேர்தலில் திமுக பாமக ஆதரவு அளித்து அதிமுகவுக்கும் பாமக தலைமைக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்கள்.


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இங்குள்ள 12-வது வார்டில் போட்டியிட பாமக விரும்பியது. தங்களுக்கு அந்த வார்டில் சீட்டு ஒதுக்க அதிமுகவை பாமக வலியுறுத்தியது. ஆனால், அந்த வார்டை தர அதிமுக மறுத்துவிட்டது. இதனால் பாமக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். தங்களுக்கு சீட்டு ஒதுக்காத நிலையில், அங்கே அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று பாமக நிர்வாகிகள் முடிவெடுத்தனர். அந்த வார்டில் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்றும் பாமக நிர்வாகிகள் கூடி முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. எனவே திமுகவுக்கு ஆதரவு அளிக்க பாமகவினர் முடிவெடுத்தனர்.
இதனையடுத்து பாமகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி துணை தலைவர் மாது, மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும் ஒன்றிய துணைத்தலைவருமான அழகர் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் கும்பகோணம் திமுக எம்எல்ஏவான சாக்கோட்டை அன்பழகனை சந்தித்து தங்கள் ஆதரவை திமுகவுக்கு தெரிவித்தனர். திமுக சார்பில் 12-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்யவும், அதிமுக வேட்பாளர்களை தோல்வி அடைய செய்வோம் என்று திமுக எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்துவிட்டு கிளம்பி சென்றிருக்கிறார்கள். அரசியல் களத்தில் திமுகவும் பாமகவும் தொடர்ந்து முட்டி மோதிவருகிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் திமுகவுக்கு பாமகவினர் ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

click me!