நீ அந்த வம்சாவளியாக இருக்க வாய்ப்பே இல்லை!! கருணாஸை கேவலமாக கிழித்தெறிந்த பாமகவினர்....

By sathish kFirst Published Sep 20, 2018, 6:58 PM IST
Highlights

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பது வன்னியர்கள் இல்லை என்றும், வன்னியர்கள் தான் அதிகம் இருப்பதாக ராமதாஸ் பொய் சொல்லி வருவதாக கருணாஸ் கூறியுள்ளது சர்ச்சையை  பேச்சால் பாமகவினர் கொந்தளித்துள்ளனர்.

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருணாஸ் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்திற்கு கருணாஸ் அனுமதி வாங்கியிருந்தார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் இருந்து 50 வேன்களில் ஆட்களை கருணாஸ் கட்சியினர் அழைத்து வந்திருந்தனர்.

கூட்டத்தில் பேசிய கருணாஸ் ஒரு கட்டத்தில் தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேச ஆரம்பித்தார். அதாவது ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து ஆர்பாட்டத்திற்கு அனுமதி வாங்கியிருந்தார் கருணாஸ். ஆனால் திடீரென கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, தமிழகத்தில் அதிகம் இருப்பது வன்னியர்கள் என்று ராமதாஸ் கூறிக் கொண்டிருக்கிறார்.

   ஆனால் ராமதாஸ் கூறுவது பொய். தமிழகத்தில் வன்னியர்கள் அதிகம் கிடையாது. தமிழகத்தில் அதிகம் இருப்பது முக்குலத்தோர் தான் என்று கருணாஸ் கூறினார். அதாவது தமிழக மக்கள் தொகையில் சுமார் 28 விழுக்காட்டினர் முக்குலத்தோர் இருப்பதாக அவர் தெரிவித்தார். எனவே ஜாதி வாரியாக கணக்கெடுத்தால் ராமதாஸ் கூறுவது பொய் என்றும், முக்குலத்தோரேஅதிகம் என்பதும் தெரிந்துவிடும் என்று கருணாஸ் கூறினார். கருணாஸின் இந்த வன்மத்தைத் தூண்டும் பேச்சால் பாமகவினர் கொந்தளித்துள்ளனர்.

கருணாஸுக்கு எதிராக வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில்;   காட்டுமிராண்டிதனத்தை வெளிப்படுத்தும் வகையில் மாபெரும் சமுகத்தின் தலைவர்கள் வழி நடத்திய கொங்கு வேளாளர்,வன்னியர்,நாடார் சமுதாயங்களை கேவலமாகப் பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

''கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தானடி''என்பதற்கேற்ப எங்கள் பெருமதிப்புக்குரிய தேவர் சமுதாயத்தின் பெயரின் மற்ற சகோதர சமுதாயங்களை கேவலமாகப் பேசியதன் மூலம் ''பசும்பொன் தேவரின் வம்சாவளியாக அவர் இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன்.

மாவீரம் தீரன் சின்னமலையுடன் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய போது கருப்ப சேர்வை என்ற தேவரே தளபதியாக இருந்தார்.

தமிழகத்தின் மாபெரும் நான்கு சமுதாயங்கள் வன்னியர், கொங்கு வேளாளர்,தேவர்,நாடார் என்ற உண்மை தெரிந்தும் மருத்துவர் அய்யா அவர்களை கொச்சைப் படுத்தியும்,முதல்வரைக் கேவலப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு கொங்கு வேளாளர் சமுதாயத்தை கேவலப்படுத்தியும்,கல்விக்கண் காமராஜர் குறித்து அவதூறாகப் பேசியும் எந்த தகுதியும் இல்லாத கருணாஸ் அந்த பதவியின் அருமை உணராமல் பேசியிருக்கிறார்.

சமுதாய நல்லிணக்கம் விரும்புகிற சமுதாயங்களை ஒரு சமுதாயத்தின் போர்வையில் பேசி பதற்றத்தை உருவாக்கி இருக்கிறார். எனவே கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சமூக பிரச்சனைகளை உருவாக்கும் என்று எச்சரிக்கிறோம்.

click me!