ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு..!

By manimegalai aFirst Published Sep 20, 2018, 5:06 PM IST
Highlights

இந்து அறநிலையத்துறை ஊழியர்களை அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை போலீஸ் நிலையத்தில் ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறை ஊழியர்களை அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை போலீஸ் நிலையத்தில் ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, போலீசார் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமுற்ற 
பாஜக ஹெச்.ராஜா, தன் நிலை தடுமாறி, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், மோசமான வார்த்தைகளை பேசி உளறிக் கொட்டிவிட்டார். ஆமை புகுந்த வீடும், அறநிலையத்துறை புகுந்த கோயிலும் உருப்படாது என்றும், கோயில் இருக்கு, 
இடிபாடா இருக்கும் என்றும் பேசியிருந்தார்.

அவரது பேச்சால், காவல் துறை அதிகாரிகள், நீதித்துறையினர், அறநிலையத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் 
ஏராளமான இடங்களில் அவருக்கு எதிராக புகாரும் கொடுக்கப்பட்டது., சில புகார்களின் அடிப்படையில், ஹெச்.ரஜாவை பிடிக்க 2 
தனிப்படை போலீசார் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், ஒரு 
கூட்டத்தில் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து, ஹெச்.ராஜா, வரும் அக்டோபர் 3 ஆம் தேதி 4.30 மணிக்கு 
ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹெச்.ராஜாவுக்கு எதிராக, திருவாரூரில், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு, தியாகராஜ சாமி கோயில் பணியாளர்கள் மற்றும் உதவி ஆணையர் அலுவலகத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹெச்.ராஜாமீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் புகார் மனுவும் கொடுத்திருந்தனர். நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய ஹெச்.ராஜாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஹெச்.ராஜா பேசும்போது, இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் பற்றி அவதூறாக பேசியிருந்தார். அவரது பேச்சால், அறநிலையத்துறை ஊழியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில், மதுரை மாவட்டம், அழகர்கோயில் பணியாளர்கள், இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் சுமார் 93 அதிகாரிகள், அப்பன் திருப்பதி போலீஸ் நிலையத்தில் ஹெச்.ராஜா மீது புகார் கூறினர். அவர்களைது புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!