வன்னியர் சமூக 10 லட்சம் கோடியை அமுக்கிய ராமதாஸ்!! திமுக சொத்துக்கள் அடித்து பிடுங்க பட்டவையே!! அடித்து கொள்ளும் பாமக - திமுக!

By Vishnu PriyaFirst Published Apr 14, 2019, 2:18 PM IST
Highlights

 இந்த தேர்தல் போரில் ஸ்டாலினின் மிகப்பெரிய எதிரி யார்? என்று கேட்டால், ‘எடப்பாடியார், ஓ.பி.எஸ்., அல்லது மோடி’ என பதில் சொல்வீர்களானால், நீங்கள் மிகப்பெரிய அரசியல் தெரியாதவர்கள்! என்று அர்த்தம். ஸ்டாலினின்  பெரிய எதிரி இந்த தேர்தலில் ராமதாஸ்தான்.
 

இந்த தேர்தல் போரில் ஸ்டாலினின் மிகப்பெரிய எதிரி யார்? என்று கேட்டால், ‘எடப்பாடியார், ஓ.பி.எஸ்., அல்லது மோடி’ என பதில் சொல்வீர்களானால், நீங்கள் மிகப்பெரிய அரசியல் தெரியாதவர்கள்! என்று அர்த்தம். ஸ்டாலினின்  பெரிய எதிரி இந்த தேர்தலில் ராமதாஸ்தான்.

அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்த அன்று ‘சூடு சொரணை இருக்குதா?’ என்று கேட்டு, பிரச்னையை துவக்கியவர் இதோ இன்று வரையில் டாக்டரை தூக்கிப்போட்டு பந்தாடி வருகிறார். அதில் மிக முக்கியமாக வன்னியர் சங்க கல்வி அறக்கட்டளையை பற்றி ஸ்டாலின் சமீபத்தில் இழுத்துவிட்ட விவகாரம் பெரிதாய்  பற்றி எரிய துவங்கியுள்ளது. 

அதாவது “வன்னியர் சங்க கல்வி அறக்கட்டளையின் பல்வேறு சொத்துகளை எல்லாம் தனது குடும்பச் சொத்துக்களாக ராமதாஸ் மாற்றிக் கொண்டிருக்கிறார். வன்னியர் சொத்துக்கள் அனைத்தும் ராமதாஸின் துணைவியார் பெயரில் இருக்கிறது. இந்த சொத்துக்களைக் காப்பாற்ற அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிட்டார் ராமதாஸ்’ என்று ஸ்டாலின் சமீபத்தில் துவைத்தெடுத்தார். 

இது வன்னிய சமுதாய மக்களை மிக உக்கிரமாக ராமதாஸை நோக்கி திரும்ப வைத்திருக்கிறது. ஏற்கனவே காடுவெட்டி குரு மரணத்தின் மூலம் ராமதாஸ், அன்புமணி இருவர் மீதும் பெரும் அப்செட்டில் இருக்கும் வன்னிய சொந்தங்கள் இப்போது இந்த பணம், சொத்து விவகாரத்திலும் தங்கள் தலைமை மீது ஆத்திரப்படுவதால் டெரராகி கிடக்கிறது பா.ம.க. வட்டாரம். 

ஸ்டாலின் கிளப்பிய விவகாரம் எந்தளவுக்கு உண்மை என்று விசாரிக்கப்போனால் பெரும் வில்லங்கங்கள் வெடிக்கின்றன. அதாவது “வன்னியர் குல சத்திரிய சங்கம்தான் அனைத்து வன்னிய சங்கங்களின் தாய் சங்கம். இந்த சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் சென்னை புரசைவாக்கம் பெருமாள் பேட்டையில் பழைய புவனேஸ்வரி தியேட்டரின் அருகில் உள்ளது. இதன் பழைய நிர்வாகி இறந்ததும் பா.ம.க.வின் மாஜி மத்தியமைச்சர் ஏ.கே.மூர்த்தி டீம் அதை ஆக்கிரமிப்பு செய்தது. இதை வன்னிய குல சத்திரிய சங்கத்தினர் தட்டி கேட்டனர். பிரச்னை ராமதாஸிடம் போக, அவரோ அன்புமணியை பேசி முடிக்க சொன்னார். அன்புவோ, நம்ம சமுதாய மக்கள் சொத்துதானே! இதை நாங்களே வெச்சுக்குறோம்! என்று பிடிச்சுட்டார். அந்த இடத்துல மூன்று மாடி கட்டி வாடைகைக்கு விட்டிருக்காங்க. மாச அறுபதாயிரம் ரூபாய் வருது, இது எங்கே போகிறது, இந்த பணத்தை அனுபவிப்பது யார்? அலச வேண்டும்.”  என்கிறார் தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன். 

வன்னியர் குல கூட்டமைப்பின் தலைவரான ராமமூர்த்தி “வன்னியர் சமுதாயத்துக்கு சொந்தமாக தமிழகமெங்கும் இருநூறுக்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் உள்ளன. இவற்றின் சொத்து  மதிப்பு சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய். இந்த சொத்துக்கள் எல்லாம் தற்போது ராமதாஸ் உள்ளிட்ட ஒரு சிலரது குடும்பத்தின் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த சமுதாயத்தின்ன் ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே உள்ளனர். 

தர்மபுரியில் சோழக்கொட்டை எனும் இடத்தில் பத்து ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த வன்னியர் சமூக உண்டு உறைவிடப்பள்ளியை, நிர்வாகிகளை மிரட்டி தனது சங்கத்தின் பெயருக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். இதை சரஸ்வதி ராமதாஸ் உண்டு உறைவிடப்பள்ளி என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார். இதைப்போல, தமிழகம் முழுவதும் பல்வேறு வன்னியர் சங்கத்தின் சொத்துக்களை ராமதாச் குடும்பம் கைப்பற்றியுள்ளது. 

ராமதாஸ் குடும்பம் நிர்வகித்து வரும் அவரது அறக்கட்டளைகள் சொத்துக்கள் வரிசை எண் 83-ல் வருவதால் அவற்றை தனது மனைவி, மகள்கள், பேரக்குழந்தைகள் ஆகியோரின் பேரில் அவசர அவசரமாக பத்திரம் பதிவு செய்து வருகிறார். அவர் இந்த கூட்டணிக்குள் செல்ல இந்த அறக்கட்டளை சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சியும் முக்கிய காரணம். 

இதையெல்லம் ஸ்டாலின் வெளிக்கொண்டுள்ளதால் அவர் மீது பாய்கிறார்.” என்கிறார். 

சரி இந்த குற்றச்சாட்டுகளுக்கு ராமதாஸ் மற்றும் அவர் தரப்பு என்ன பதில் சொல்கிறது?....”வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துக்களை நான் எனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதியிருப்பதாக கூறாப்படும் குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அரசியல், பொதுவாழ்வில் இருந்து அவர் விலக தயாரா?  ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் வன்னியர் சங்க கல்வி அறக்கட்டளையில் ஆய்வு செய்ய நான் அனுமதிக்கிறேன். அதே போல தி.மு.க. அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை ஆகியவற்றில் பா.ம.க. வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் குழுவை கொண்டு ஆய்வு செய்ய அனுமதிக்க ஸ்டாலின் தயாரா? வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துக்கள் முறைப்படி வாங்கப்பட்டவை. ஆனால் பல மாவட்டங்களில் தி.மு.க. அறக்கட்டளை சொத்துக்கள் வளைக்கப்பட்டவை.” என்று பொளந்திருக்கிறார். 

பா.ம.க. தரப்போ “தன் முதுகில் அழுக்கு மூட்டையை வைத்துக் கொண்டு தேவையில்லாமல் மருத்துவரய்யாவை சீண்டிவிட்டார் ஸ்டாலின். முரசொலி அறக்கட்டளையில் மகன் உதயநிதியை நிர்வாகியாக அமர்த்திவிட்டு, அழகிரி குடும்பத்தினரை விலக்கி வைத்ததில் துவங்கி பல்வேறு முறைகேடுகளை செய்துள்ள ஸ்டாலினின் தில்லுமுல்லுகளை விரைவில் வெளிக்கொண்டு வருவோம்.” என்கிறார்கள். 

ஆக எல்லாரும் வளமாதான்யா இருக்கீங்க!

click me!