ஜெயலலிதா நினைவு மண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் மோடியை அழைக்க அதிமுக திட்டம்.!!

By T BalamurukanFirst Published Jul 8, 2020, 7:49 AM IST
Highlights

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் பல நாட்களாக சிகிச்சையில் இருந்து சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5 2016ம் ஆண்டு மரணமடைந்தார். அவர் முதலமைச்சராக இருக்கும் போது மரணமடைந்ததால் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் பல நாட்களாக சிகிச்சையில் இருந்து சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5 2016ம் ஆண்டு மரணமடைந்தார். அவர் முதலமைச்சராக இருக்கும் போது மரணமடைந்ததால் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

ஜெயலலிதா நினைவு மண்டபம் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. 10 ஏக்கர் நிலப்பரப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளன.துபாயில் இருந்து வந்திருந்த கட்டிடக்கலை நிபுணர்களின் ஆலோசனைப்படி பீனிக்ஸ் பறவையின் இறக்கை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த கட்டுமானப் பணியில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

 ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கடம்பூர் ராஜூ மற்றும் தலைமைச் செயலாளர் க.சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.மணிவாசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கட்டுமானங்கள் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர். நினைவிட பணிகளை செப்டம்பரில் முடிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்கிற தகவல் உலாவந்து கொண்டிருக்கிறது.

click me!