தனியார் செய்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்! திருமாவளவன் அறிக்கை ..!

By manimegalai aFirst Published Jul 7, 2020, 11:10 PM IST
Highlights

ஊடகவியலாளர்களை குறிவைத்து, சனாதன பயங்கரவாதிகள் செயல் பட்டு வருவதாகவும், அவர்களை தமிழக அரசு இதற்க்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தும் விதமாக, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

ஊடகவியலாளர்களை குறிவைத்து, சனாதன பயங்கரவாதிகள் செயல் பட்டு வருவதாகவும், அவர்களை தமிழக அரசு இதற்க்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தும் விதமாக, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் காட்சி ஊடகங்களில் பணியாற்றும் சில மூத்த ஊடகவியலாளர்கள்க்  குறிவைத்து சனாதன பயங்கரவாதிகள் தொடுத்திருக்கும் தாக்குதலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.  இதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது, கருத்துரிமையைப் பறிக்க முனையும் இத்தகைய நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கொரோனா பேரிடர் பாதிப்பு காரணமாக ஊடகத்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். மேலும் 30 ஆயிரம் பேர் வரை வேலை இழப்பார்கள் என்று வல்லுநர்கள் கணித்து கூறியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் காட்சி ஊடகங்களில் பணியாற்றும் சிலரை குறிவைத்து அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கியும், அவர்களது வேலையை பறிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சனாதன பயங்கரவாதிகள் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். இந்த சட்டவிரோத செயலை அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

நியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை ஆகிய தொலைக்காட்சிகளில் பணியாற்றும் ஊடகவியாளர்கள் சிலரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. சனாதன பயங்கரவாதிகள் அரசாங்கத்தின் அதிகார அமைப்பாக கருதி கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. கருத்துரிமை குரல்வளையை நெரிக்கும் விதமாக ஒருபுறம் ஊடகவியாளர்கள் மீது பொய் வழக்குகளைப் இன்னொருபுறம் சமூக ஊடகங்களை பயன்படுத்தி தாக்குதல் தொடுப்பது, இவற்றிற்கும் மேலாக கௌரி லங்கேஷ் போன்ற நேர்மையான பத்திரிக்கையாளர்களை படுகொலை செய்வது என்ற மும்முனை தாக்குதலை பயங்கரவாதிகள் தொடுத்துள்ளனர். கருத்துரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இது மாறியிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இப்படிப்பட்டவர்களின் நடவடிக்கைகளை அனுமதிப்பது சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது எனவே தமிழக அரசு இதை வேடிக்கை பார்க்கக் கூடாது, துவக்கத்திலேயே இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் ஊடக சுதந்திரத்தை காப்பாற்றுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றென்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இந்த அறிக்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

click me!