கேரளா :தங்கம் கடத்தல் ராணி ஸ்வப்னா.. காப்பாற்ற துடிக்கும் காங்கிரஸ் பாஜக.. விளக்கம் தந்த முதல்வர் பிரனாய்..!!

By T BalamurukanFirst Published Jul 7, 2020, 10:13 PM IST
Highlights

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் , அமீரகத்திலிருந்து வரும் பார்சல்களை விடுவிக்குமாறு சுங்கத்துறைக்கு போன் செய்துள்ளதாகவும் பல முறை தங்க கடத்தலில் கிங்பின்களில் ஒருவராக கருதப்படும் ஸ்வப்னாவை  காப்பாற்றி விட்டதாகவும் சிவசங்கர் மீது குற்றம் சாட்டியுள்ளன.

தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்கு தொடர்பில்லை என்ன முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. தங்கக் கடத்தலில் சர்ச்சைக்குரிய பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக புகார் எழுந்ததால் முதன்மை செயலாளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தங்கக் கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது. தங்கக்கடத்தல் விவகாரத்தில் சிபிஐ உட்பட எந்த அமைப்பின் விசாரணைக்கும் கேரள அரசு முழு ஒத்துழைப்பு தரும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.


திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயரில் பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது. மற்றோரு நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனையிடுவதில்லை. இந்த பார்சலை ஸரித் என்பவர் எடுத்து சென்றுள்ளார்.இதுபோன்ற பார்சல்களில் தங்கம் கடத்துவதாக சுங்க இலாக்காத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வெளியானது.இதை தொடர்ந்து , வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இது போன்ற பார்சல்களை சோதனை செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்றனர். அதன்படி திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்ட போது, ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்ததை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும்  ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்வப்னா அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியவர் எப்படி கேரள தகவலலா தொடர்பு துறையில் மேலாளராக பணியில் அமர்ந்தார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்வர்பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால்,அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.இந்த நிலையில் முதன்மைச் செயலர் சிவசங்கர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள எதிர்க்கட்சிகள் தங்கம் கடத்தலில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் தலைமைச் செயலகத்தில் முக்கிய அதிகாரிகள் இதில் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் , அமீரகத்திலிருந்து வரும் பார்சல்களை விடுவிக்குமாறு சுங்கத்துறைக்கு போன் செய்துள்ளதாகவும் பல முறை தங்க கடத்தலில் கிங்பின்களில் ஒருவராக கருதப்படும் ஸ்வப்னாவை  காப்பாற்றி விட்டதாகவும் சிவசங்கர் மீது குற்றம் சாட்டியுள்ளன. அதே போல, ஸ்வப்னாவை சிவசங்கர்தான் பதவியில் நியமனம் செய்யதாகவும் புகார் எழுந்துள்ளது. சிவசங்கருக்கும் ஸ்வப்னாவுக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை நடைபெற்று வருகின்றது.

இது குறித்து கேரள முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்... "தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்கு தொடர்பில்லை என்ன முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. தங்கக் கடத்தலில் சர்ச்சைக்குரிய பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக புகார் எழுந்ததால் முதன்மை செயலாளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தங்கக் கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது. தங்கக்கடத்தல் விவகாரத்தில் சிபிஐ உட்பட எந்த அமைப்பின் விசாரணைக்கும் கேரள அரசு முழு ஒத்துழைப்பு தரும் எனவும் கூறியுள்ளார்.
 

click me!