எடப்பாடிக்கு பிரதமர் மோடி கொடுத்த புத்துணர்ச்சி டானிக்..!

By vinoth kumarFirst Published May 13, 2019, 9:36 AM IST
Highlights

பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறிய வாழ்த்து புத்துணர்ச்சி டானிக்காக அமைந்துள்ளது அமைந்துள்ளது.

பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறிய வாழ்த்து புத்துணர்ச்சி டானிக்காக அமைந்துள்ளது அமைந்துள்ளது.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் தனது பிறந்த நாளை மதுரையில் எடப்பாடி பழனிசாமி கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிமுகவின் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை மிகவும் உற்சாகமாக கொண்டாட ஒரு மாதத்திற்கு முன்னரே தயாராகினார். ஆனால் இடைத் தேர்தலைக் காரணம் காட்டி எடப்பாடி அப்போதே அதற்கு தடை போட்டு விட்டார்.

இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி பெரிய அளவில் எங்கும் பிளக்ஸ் போர்டுகளை சுவரொட்டிகளும் அமைக்கப்படவில்லை. மேலும் பிறந்த நாள் வாழ்த்து கூற வேண்டும் என்று தன்னை வந்து யாரும் சந்திக்க வேண்டாம் என்றும் எடப்பாடி இரண்டு நாட்களுக்கு முன்னரே மிகவும் கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனால் பிறந்தநாள் அன்று மதுரையில் உள்ள அதிமுக முக்கிய பிரமுகர்களும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக வந்துள்ள அதிமுக பிரமுகர்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்துக் கூறினார். 

இதற்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தைப் பொருத்தவரை மக்களவைத் தேர்தலிலும் சரி இடைத்தேர்தலிலும் சரி பாஜக அதிமுக கூட்டணிக்கு தான் அனைத்தும் சாதகமாக இருப்பதாக மோடி எடப்பாடியிடம் உற்சாகத்துடன் கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி பழனிசாமி அதன் பிறகு மிகுந்த உற்சாகமாகி விட்டார். 

தமிழகத்தில் சாதகமான தேர்தல் முடிவுகள் வரும் என்று பிரதமரை கூறியுள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு புத்துணர்ச்சி கொடுத்தது போல் இருந்துள்ளது. அன்றைய தினம் தன்னைப் பார்க்க வந்த அனைவரிடத்திலும் கிட்டத்தட்ட பிரதமர் மோடி கூறியதை கூறி மகிழ்ந்திருக்கிறார் எடப்பாடி. மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் மோடி இப்படி கூறி இருப்பார் என்றும் அதிமுக பிரமுகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.மோடி கொடுத்த புத்துணர்ச்சி டானிக்கு உற்சாகத்துடன் மாலையில் பிரச்சாரத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சிகளை மிகுந்த உற்சாகத்துடன் கிழித்து தொங்கவிட்ட மூலமே அவர் எந்த அளவிற்கு உற்சாகமாக இருந்தார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

click me!