"Well Done" தேவேந்திர குல வேளாளர் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்டிய பிரதமர் மோடி..!

By karthikeyan VFirst Published Feb 14, 2021, 1:45 PM IST
Highlights

பட்டியலினத்தை சேர்ந்த 7 உட்புரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக்கோரிய அப்பிரிவு மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு செயல்பட்ட விதத்தை பாராட்டியும் பேசினார் பிரதமர் மோடி.
 

பிரதமர் மோடியின் தமிழக வருகை மற்றும் அவரது உரையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஷயம், தேவேந்திர குல வேளாளர் குறித்த அறிவிப்பு தான். அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல், பட்டியலினைத்தை சேர்ந்த 7 உட்புரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்ற அந்த சமூக மக்களின் கோரிக்கையை ஏற்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7  உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்று அச்சமூக மக்கள் மற்றும் புதிய தமிழக கட்சி சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில், அதுகுறித்து ஆய்ந்து ஆராய்ந்து, அந்த 7 உட்புரிவுகளையும் தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது தமிழக அரசு. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, பட்டியலினத்தை சேர்ந்த மேற்கூறிய 7 உட்புரிவுகளையும் தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிப்பதற்கான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்தகட்ட விவாதத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்படவுள்ளது.

இந்நிலையில், இன்று சென்னை வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, பட்டியலினத்தை சேர்ந்த 7 உட்புரிவுகளை அவர்களின் பாரம்பரிய பெயரான தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க அனுமதி கோரிய அச்சமூக மக்களின் நீண்டகால கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டது. அதற்கான சட்டவரைவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு ஆராய்ந்து செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது என்றார் பிரதமர் மோடி. 

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால், தேவேந்திர குல வேளாளர் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

click me!