இன்று மூன்றாவது கட்ட தேர்தல்... அம்மாவிடம் ஆசி வாங்கி மோடி ஓட்டுப் போட்டார்!

Published : Apr 23, 2019, 08:54 AM ISTUpdated : Apr 23, 2019, 08:55 AM IST
இன்று மூன்றாவது கட்ட தேர்தல்... அம்மாவிடம் ஆசி வாங்கி  மோடி ஓட்டுப் போட்டார்!

சுருக்கம்

தேர்தலில் வாக்களிப்பதற்காக அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு இன்று காலை 8 மணி அளவில் பிரதமர் மோடி வருகை புரிந்தார். மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பிரதமர் மோடி செலுத்தினார். 

குஜராத்தில் இன்று நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கை செலுத்தினார். 
 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜாரத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.


தேர்தலில் வாக்களிப்பதற்காக அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு இன்று காலை 8 மணி அளவில் பிரதமர் மோடி வருகை புரிந்தார். மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பிரதமர் மோடி செலுத்தினார். முன்னதாக காந்திநகரில் உள்ள தனது தாய் வசிக்கும் வீட்டுக்கு வந்த பிரதமர் மோடி அவரிடம் ஆசி பெற்றார். அப்போது வீட்டின் முன் கூடியிருந்த மக்களையும் பிரதமர் மோடி சந்தித்துபேசினார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!