PM Modi: உலகளவில் கெத்து காட்டும் பிரதமர் மோடி.. 3வது முறையாக முதலிடம்.. அமெரிக்க அதிபர் 6வது இடம்..!

Published : Feb 08, 2022, 05:50 AM ISTUpdated : Feb 08, 2022, 05:57 AM IST
PM Modi: உலகளவில் கெத்து காட்டும் பிரதமர் மோடி.. 3வது முறையாக முதலிடம்.. அமெரிக்க அதிபர் 6வது இடம்..!

சுருக்கம்

அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற தகவல் ஆய்வு நிறுவனம், சர்வதேச தலைவர்கள் குறித்து ஆண்டுதோறும் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 13 நாட்டு தலைவர்கள் குறித்து இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 

உலகின் புகழ் பெற்ற தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் போன்ற முக்கிய உலகத் தலைவர்களை  பின்னுக்கு தள்ளி பிரதமர் மோடி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வருகைக்கு முன்பு வரை இந்தியா என்ற சொல் ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாடு என்று மட்டுமே தெரியும். ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக மோடி  பதவியேற்றதற்குப் பின்னர். அவர் எடுத்த திட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாட்டு தலைவர்களுடனான சந்திப்புகள் சர்வதேச நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் பிரதமர் மோடி ஏழை எளிய நாடுகளுக்கு மருந்து மற்றும்  தடுப்பூசிகளை வாரி வழங்கியது மட்டுமல்லாமல், உலகின் வல்லரசு அமெரிக்காவுக்கே ஹைட்ரோகுளோரோ குயின்  மாத்திரைகளை கொடுத்து மக்களின் உயிரை காப்பாற்றினார். பிரதமர் மோடியின் இந்த செயல் சர்வதேச அளவில் இந்தியாவின் மனிதநேயத்தை பறைசாற்றியது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் கொடிய சீனா இந்திய எல்லையில் வால் ஆடியபோது முப்படைகளையும் சீனா நோக்கி திருப்பி இது தான் முடிவு என்றால் மோதிப் பார்க்கலாம் என பிரதமர் மோடி எல்லைக்கே சென்று முழங்கியது, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர வைத்தது. மனிதநேயமாக இருந்தாலும் சரி, வீரமாக இருந்தாலும் சரி பிரதமர் மோடிக்கு நிகர் மோடி தான் என்ற புகழ் சர்வதேச அளவில் ஓங்கி ஒலித்தது. 

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற தகவல் ஆய்வு நிறுவனம், சர்வதேச தலைவர்கள் குறித்து ஆண்டுதோறும் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 13 நாட்டு தலைவர்கள் குறித்து இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 

இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகித்தார். இந்த ஆண்டுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின.அதில், பிரதமர் மோடி 72 சதவீத ஆதரவு பெற்று 3வது ஆண்டாக முன்னிலை வகிக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் 64 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இத்தாலி பிரதமர் மரியோ திராகி 57 சதவீத வாக்குகளுடன் 3ம் இடத்தை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 41 சதவீத வாக்குகளுடன் 6வது இடத்தையும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 41 சதவீதத்துடன் 8வது இடத்தையும் பிடித்துள்ளனர். உலகின் புகழ் பெற்ற தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 3வது ஆண்டாக முன்னிலை வகிக்கித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!