வேட்டி சட்டை கட்டி அசத்திய மோடி வேட்டி விளம்பரத்தில் தோன்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது பிரதமர் மோடி தமிழகத்தின் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டை, துண்டு அணிந்து ஜின்பிங்கை வரவேற்றார். அந்த ஆடையுடனே மாமல்லபுரம் சிற்பங்களை பற்றிய பெருமைகளை எடுத்துக் கூறினார்.
மோடி வேட்டி சட்டை அணிந்து மாமல்லபுரத்தில் அசத்தியது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் வேட்டியுடன் மோடி சீன அதிபருடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து ராம்ராஜ் காட்டன் வேட்டிகள் சட்டைகள் நிறுவனம் நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளது. அந்த விளம்பரத்தில் உறவுகள் மேம்பட என சீன -இந்திய உறவுகளை குறிக்கும் வகையில் விஅபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்து ராம்ராஜ் வெறும் பெயர் அல்ல. தமிழ்நாட்டின் அடையாளம் என மோடியை தமிழகராக உருவகப்படுத்தி அந்த விளம்பரம் வெளியாகி உள்ளது. இது ஒரு விளம்பர யுக்தி என்றாலும் ஒரு நாட்டின் பிரதமரை வர்த்தக விளம்பரத்திற்கு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் - அதிலும் இரு நாட்டு தலைவரை பயன்படுத்தியிருப்பது குற்றமோ குற்றம் என்கிற சர்ச்சையும் எழுந்துள்ளது.