பாகிஸ்தானுடன் கூட்டா..? திமுகவை நிம்மதி பெருமூச்சுவிட வைத்த உளவுத்துறை ரிப்போர்ட்..!

By Thiraviaraj RMFirst Published Oct 12, 2019, 11:45 AM IST
Highlights

கோ பேக் மோடி டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது.
 

உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வரும் வேளையில் தன்னால் இயவில்லை என்று, இந்தியாவின் மதிப்பை குறைத்து பிரச்சாரம் செய்யும் வேலையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக எடுத்த அனைத்து முயற்சிகளிலும் மண்ணை கவ்விய நிலையில், பொய் செய்தி பரப்பியாவது தனது ஆதங்கத்தை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது.

பிரதமர் மோடி தமிழகம் வரும் போது எல்லாம் டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, அது இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை போல் தற்போதும் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, தமிழகம் வந்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை வரவேற்கும் வகையில் #TNwelcomesXiJinping என்ற ஹேஷ்டேக் மூலம் ஒரு தரப்பினர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு தரப்பினர் #GoBackModi என்ற ஹேஷ்டேக் மூலம் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

 

#GoBackModi ஹேஷ்டாக்   மீண்டும் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளதால் இம்முறை இந்திய இறையாண்மைக்கு எதிரான இத்தகைய செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை விசாரணை தொடங்கி உள்ளது.  இதற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் அடையாளமாக #TNwelcomesModi என்ற ஹேஷ்டேக் மூலம் பிரதமர் மோடியை வரவேற்று தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். மாமல்லபுரம் போன்ற வரலாற்று புகழ்பெற்ற இடத்தில் நடக்கும் சந்திப்பு தமிழகத்திற்கு பெருமை என்றும் இப்படி மோதல் போக்கை தொடர்வது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல என்றும் பலர் டுவீட் செய்து வருகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வந்தார். அப்போது போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி பல்வேறு கட்சியினர் கறுப்புக் கொடியுடன் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

அப்போது இந்தப் போராட்டங்கள் குறித்த செய்திகள் மற்றும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும், #GoBackModi என்ற ஹேஷ்டேக் மூலம் டுவிட்டரில் பகிரப்பட்டது. இந்த ஹேஷ்டேக் அப்போது இந்திய அளவில் ட்ரெண்டானது. மோடி தமிழகம் வருகையின் போது எல்லாம் இது போன்று  #GoBackModi ஹேஷ்டாக்  உருவாக்கப்பட்டு  டிரெண்ட்டாகி வருவதால் இது குறித்து உளவுத்துரை விசாரணையில் ஈடுபட்டு உள்ளது. 

is trending in Facebook. Let’s put our share and congratulate for taking Modi to this level

— Muzzammil Aslam (@MuzzammilAslam3)

 

இதில், பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து இந்த ஹேஷ்டாக்கை உருவாக்கி, ஒவ்வொரு முறையும் டிரெண்டிங் ஆக்கி வருவது தெரிய வந்துள்ளது.  தமிழ் மற்றும் தமிழகம் மீது அதீத பாசம் கொண்டிருப்பது போன்ற கருத்துக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகின்றனர். #GoBackModi ஹேஷ்டாக்கை டிரெண்டிங் ஆக்கியது போன்று பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஆதரவான ஹேஷ்டாக்குகளையும் உருவாக்கி இவர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.



Turkey is Not Alone

Love for Pakistan❤🇹🇷🇵🇰❤ pic.twitter.com/L5IPmnXiQE

— Jamshaid (@jamshaidasi)

 

பாகிஸ்தானில் இருந்து  58 சதவீத ட்விட்டுகள் போடப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து குறைவான ட்விட்டுகளே, 2 சதவீதம் மட்டுமே தமிழ் ட்விட்டுகள், 23 சதவீத உருது ட்விட்டுகள் .

மோடி, தமிழகம் வரும் போது மட்டும் இத்தகைய ஹேஷ்டாக்குகள் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்படுவதால், இதன் பின்னணியில் தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சி இருக்கலாம் என முதலில் உளவுத்துறை சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தி எதிர்ப்பு, திராவிட கொள்கை காரணமாக கூட அவர்கள் இத்தகைய ஹேஷ்டாக்கை உருவாக்கி இருக்கலாம் என சந்தேகித்ததாக கூறப்படுகிறது. ஆனால் உளவுத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியதில், இதன் பின்னணியில் பாகிஸ்தான்  இருப்பது தெளிவாகி உள்ளது.

click me!