சீன மொழியில் பேசி, அதிபர் ஜி ஜின்பிங்கை மிரளவைத்த தமிழர்..!! மொழிபெயர்ப்பு செய்து அசத்திய கோவை மைந்தன்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2019, 10:45 AM IST
Highlights

இவரின் தந்தை மதுசூதனன் கோவையில் பிறந்து வளர்ந்தவர் ஆவார், அவரின் தாய் மேகலா திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ஆவார், பள்ளிப்படிப்பை டேராடூனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்ததுடன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர் ஆவார் ரவீந்திரன். கடந்த  2007இல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தவர்  இவர் பெரும்பாலான நாட்களை சீனாவில் கழித்ததால் இவருக்கு சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்ட்ரின் உள்ளிட்ட பலமொழிகள் அத்துப்படி, 

சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் மோடிக்கு இடையே மொழிபெயர்ப்பு  செய்தவர் ஒரு தமிழர் என்பதே நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை, ஆனால் அவர்  கோவை  சேர்ந்தவர் என்பதும், மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள்  மாணவர் ரவீந்திரன் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது புராதன சின்னங்களை இருவரும் பார்வையிட்டனர்.  அப்போது பிரதமர் மோடி, அதிபர்  ஜி ஜின்பிங்கிற்கு இந்திய பாரம்பரிய கலாச்சாரங்கள்  மற்றும் மாமல்லபுரம் புராதன சின்னங்களில் வரலாறு குறித்தும் விளக்கினார். மோடி இந்தியில் பேசியதை சீனத்திற்கு மொழிபெயர்த்து  ஜி ஜின்பிங்கிற்கு விளக்கியவர்  ஒரு தமிழர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  இரு நாட்டுத் தலைவர்களுக்கும் மொழிபெயர்ப்பு செய்வதற்காக அவர்களின்  நிழல் இருந்தவர்கள் இருவர். அதில் ஒருவர் சீன அதிகாரி மற்றொருவர் இந்திய அதிகாரியான  ரவீந்திரன் மதுசூதனன்.  இவர் சீன தலைநகர் பீஜிங்கில் இந்திய தூதரகத்தில் முதன்மை செயலாளராக உள்ளார்.  கடந்தமுறை சீனாவில் நடந்த மோடி  ஜி ஜிங்பிங் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராக இருந்து உதவினார்,  அவரே நேற்றைய சந்திப்பிற்கும்  மொழிபெயர்ப்பாளராக பணியமர்த்தப்பட்டார்.

இவரின் தந்தை மதுசூதனன் கோவையில் பிறந்து வளர்ந்தவர் ஆவார், அவரின் தாய் மேகலா திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ஆவார், பள்ளிப்படிப்பை டேராடூனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்ததுடன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர் ஆவார் ரவீந்திரன். கடந்த  2007இல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தவர்  இவர் பெரும்பாலான நாட்களை சீனாவில் கழித்ததால் இவருக்கு சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்ட்ரின் உள்ளிட்ட பலமொழிகள் அத்துப்படி,  இந்நிலையில் மோடி சீனாவுக்கு இடையேயான பயணம் என்றாலும் அல்லது இரு நாட்டுத் தலைவர்களுக்கும்  இடையேயான பேச்சுவார்த்தை என்றாலும் நம் தமிழரான ரவீந்திரன் மொழிபெயர்ப்பாளராக இருந்து உதவி வருகிறார் என்பது நம் அத்தனை பேருக்கும் பெருமை...  இவர் கடந்த 2013 சீனாவுக்கான இந்திய தூதரகத்தில் இரண்டாவது செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

click me!