ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவே இல்ல.. பல்டி அடிக்கும் அண்ணாமலை

By vinoth kumarFirst Published Sep 7, 2022, 10:12 AM IST
Highlights

மோடி பிரதமராக வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா ஒரே நாடு, ஒரே மக்கள் என்று சொல்லும் நிலைக்கு வந்துள்ளது. நடைபயணம் செல்லும் போது ராகுல்காந்தி இதை பார்ப்பார் என்ற நம்பிக்கை பாஜகவிற்கு இருக்கிறது. பொருளாதாரத்தில் இந்தியா உலகத்திலேயே 5வது இடத்தை பெற்றிருக்கிறது. 

திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லுாரிகளுக்காக, நீட் தேர்வை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது என அண்ணாமலை கூறியுள்ளார். 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய தேசிய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்க இருக்கிறார். அவருக்கு எங்களது வாழ்த்துக்கள். 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மையான காலம் ராகுல்காந்தியின் குடும்பத்தினரே பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்தியா எவற்றையெல்லாம் இழந்தது என்பதை பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க;- திடீர் மாரடைப்பால் பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்த அமைச்சர்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

மோடி பிரதமராக வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா ஒரே நாடு, ஒரே மக்கள் என்று சொல்லும் நிலைக்கு வந்துள்ளது. நடைபயணம் செல்லும் போது ராகுல்காந்தி இதை பார்ப்பார் என்ற நம்பிக்கை பாஜகவிற்கு இருக்கிறது. பொருளாதாரத்தில் இந்தியா உலகத்திலேயே 5வது இடத்தை பெற்றிருக்கிறது. 

நமது நாட்டு மக்கள் வறுமைக் கோட்டில் இருந்து மேலே வந்திருக்கிறார்கள். இதையெல்லாம் ராகுல் காந்தி நீண்ட நடைபயணத்தில் நாட்டின் வளர்ச்சியை பார்ப்பார். ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி எங்கேயும் சொல்லவில்லை. இதை தவறாக காங்கிரசார் பரப்பி வருவதை பல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளேன். 8 ஆண்டுகளில் இந்தியாவை எப்படி மோடி இணைத்துள்ளார் என்பதையெல்லாம் பார்க்கும் ராகுல் காந்தி, நடைபயணம் முடியும் போது நிச்சயமாக மோடியின் பக்தராக மாறுவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இதையும் படிங்க;- நெருக்கும் மத்திய அரசு... அலர்ட் ஆன செந்தில் பாலாஜி...! உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

ராகுல் காந்தியின் நடைபயணம் எந்த ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் திமுகவின் தயவில் இருக்கிறார்கள். திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லுாரிகளுக்காக, நீட் தேர்வை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது என அண்ணாமலை கூறியுள்ளார். 

click me!