பச்சைக்கொடி காட்டிய பிரதமர் மோடி... அதிர்ச்சியில் அழுது உருண்டு புலம்பும் சிவசேனா..!

By vinoth kumarFirst Published Nov 12, 2019, 3:28 PM IST
Highlights

மகாராஷ்டிராவில், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராததாலும், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்தும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு ஆளுசர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனை கூட்டணி, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி ஆகிய பிரச்சனைகளில் உடன்பாடு எட்டாததால் அங்கு அரசு அமைவதில் இரு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடித்தது. இதனையடுத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை ஆட்சி அமைக்குமாறு மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யா அழைப்பு விடுத்தார். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை தங்களிடம் இல்லை என பாஜக ஆளுநரிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 

இதையடுத்து, இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள சிவசேனாவை ஆட்சி அமைக்குமாறு மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டுள்ளதால் கூடுதல் கால அவகாசத்தை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், இவர்களது கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆளுநர்  நேற்றிரவு 8.30 மணியளவில் அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்களும் ஆட்சியமைப்பு தொடர்பாக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், மகாராஷ்டிராவில், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராததாலும், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்தும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு ஆளுசர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார்.

இதனிடையே, பிரிக்ஸ் நாடுகளின் 11-வது மாநாடு பிரேசிலில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று பிற்பகல் பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார். இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் மோடி திடீர் என அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. 

click me!