அதிமுக, திமுகவை டரியல்ஆக்க ரஜினி போட்ட பயங்கர பிளான்..!! எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் அதிரடி ஆரம்பம்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 12, 2019, 2:20 PM IST
Highlights

இந்நிலையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் எப்படி அண்ணாவின் பெயரில்  கட்சித் தொடங்கி,  தன்னை ஒரு மிதவாத இந்துவாக அடையாளப்படுத்தி இந்துக்களின் வாக்குகளையும் அதேநேரத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளையும் தக்கவைத்து வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாரோ,  அதே பாணியைப் பின்பற்றி ஜெயலலிதாவும் எப்படி ஆகச் சிறந்த ஆளுமையாக பரிணமித்தாரோ அதேபோல் ,  அதே பாணியை கடைபிடித்து  அட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதுதான் ரஜினியின் அரசியல் யுக்தி  என கூறப்படுகிறது.  இந்நிலையில் ரஜினியை கண்டு திமுக சற்று அஞ்சுவதாக தெரிகிறது. 

மக்கள் திலகம் எம்ஜிஆர் எப்படி தன்னை மிதவாத இந்துவாக அடையாளப்படுத்தி இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை அறுவடை செய்தாரோ அதே பாணியில் ஒரு மிதவாத இந்துவாக தன்னை அடையாளப்படுத்தி அனைத்து தரப்பினரின் வாக்குகளையும் பெற வேண்டுமென்பதே ரஜினியின் அரசியல் யுக்தி என தகவல் வெளியாகியுள்ளது. 

இதோ வரப்போகிறேன்... அதோ வரப்போகிறேன்... என்று பல ஆண்டுகளாக தமிழக மக்களையும் தன் ரசிகர்களையும் ஆசாப்பு  காட்டி வந்த ரஜினி இப்போது,  உண்மையிலேயே அரசியலில் குதிக்க தயாராகி விட்டார்.  அதற்கான கட்சி கட்டமைப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் களம் காண காத்திருக்கிறார்.  ஆரம்பத்தில் ஆன்மீக அரசியல் என்று  அவர் பேசியதன் மூலம்  ரஜனி ஒரு இந்துத்துவ அரசியல்வாதி என மக்கள் மத்தியில் ஒரு புரிதல் ஏற்பட்டது. அத்துடன் பிஜேபி தலைவர்களும் நெருக்கம் காட்டி வந்த நிலையில், அவர் முழு பாஜக ஆதரவாளராகவே மாறிவிட்டார் என,  கிறித்தவ,  இஸ்லாமிய சமூகத்தினர் ரஜினிமீது அதிருப்தி அடைந்தனர்.  ஆனால் சமீபத்தில் தன்மீது காவி சாயம் பூச பார்க்கிறார்கள் அதில் நானும் சிக்க மாட்டேன், ஐயன்  திருவள்ளுவரும் சிக்க மாட்டார் என கூறி திடீரென அரசியல் யூடனர் அடித்தார் ரஜனி...

இதற்கு காரணம் தொடர்ந்து பிஜேபியின் ஆதரவாளராக  தன் மீது முத்திரை குத்தப்படுவதை ரஜினி உணர்ந்து கொண்டதுதான், என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள். இது  சிறுபான்மையினர் சமூகத்திடம் இருந்து  தன்னை தனிமைப்படுத்திவிடும் என அவர் புரிந்து கொண்டுள்ளார்.  இதன் காரணமாகத்தான் தனக்கு காவி சாயம் பூச பார்க்கிறார்கள் என்று பகீரங்கமாக கூற காரணம் ஆகும்.. அதே நேரத்தில் ரஜினி அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது என்பதுதான்,  தமிழக மக்களுக்கு ஆகச்சிறந்த தலைவர் யாரும் இல்லை என்பதுதான் அதற்கு காரணம்.  திமுக தலைவர் ஸ்டாலின் அல்லது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் களத்திற்கு வந்து போட்டியிட்டு தனக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்தவர்கள் அல்ல. அப்படி யாராவது ஒருவர் செய்திருந்தால் அவரை ஆகச்சிறந்த தலைவர்  ஒப்புக்கொள்ளலாம்.  ஆனால் இருவருமே அப்படி இல்லை என்பதுதான் எதார்த்தம்.

அதே நேரத்தில் நடந்து முடிந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும்  தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி மற்றும் மக்கள் நல கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக களம் கண்ட விஜயகாந்த்,  தமிழகத்தை தமிழன் மட்டும் தான் ஆள வேண்டும் என உரக்க குரல் கொடுத்து வரும் நாம் தமிழர் கட்சி சீமான்,  என மூவருமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியும் மக்கள் மத்தியில் ஆதரவு பெறவில்லை,   வாக்கு சதவீதம் அவர்களுக்கு வந்துசேரவில்லை... எனவே அவர்கள் இந்த பட்டியலிலே இல்லை.  இதனால் தான் ரஜினி தமிழகத்தில் வெற்றிடம் என கூறி வருகிறார்.  ஆனால் மறைந்த திமுக தலைவர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்  தலஐந்து முறைக்கு மேல் முதலமைச்சர்களாக இருந்து இம்மண்ணை ஆட்சி செய்த தலைவர்கள் ஆவர்.  அவர்களுக்கு இணையாக  தற்போதைக்கு ஒரு தலைவர் இல்லை என்பதுதான் ரஜினியின் கூற்று. 

இந்நிலையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் எப்படி அண்ணாவின் பெயரில்  கட்சித் தொடங்கி,  தன்னை ஒரு மிதவாத இந்துவாக அடையாளப்படுத்தி இந்துக்களின் வாக்குகளையும் அதேநேரத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளையும் தக்கவைத்து வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாரோ,  அதே பாணியைப் பின்பற்றி ஜெயலலிதாவும் எப்படி ஆகச் சிறந்த ஆளுமையாக பரிணமித்தாரோ அதேபோல் ,  அதே பாணியை கடைபிடித்து  அட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதுதான் ரஜினியின் அரசியல் யுக்தி  என கூறப்படுகிறது.  இந்நிலையில் ரஜினியை கண்டு திமுக சற்று அஞ்சுவதாக தெரிகிறது. அதற்கு காரணம் என்ன வென்றால், ரஜினியை  பிஜேபியின் ஆதரவாளர் என்று இதுநாள் வரை கூறி வந்ததின் மூலம் தமிழகத்தில் உள்ள 12 சதவீத சிறுபான்மையினரின் வாக்குகள் ரஜினிக்கு போகவிடாமல் தடுக்கப்படும் என திமுக நம்பிவந்தது. ஆனால் அதையெல்லாம் உடைத்து நான் காவி அல்ல என மறுதலித்து  திமுகவின் திட்டத்தை உடைத்துள்ளார் ரஜினி.

 பிஜேபிக்கு தாங்கள் மட்டுமே எதிரி எனக்கூறி வாக்குகளை அள்ள நினைத்த திமுகவுக்கு.  தானும் யாருடனுன் விருப்பு வெறுப்பற்ற தனிப்பட்ட நபர் தான் எனக்கூறி அரசியலில் களமிறங்க உள்ளார் ரஜினி.  இது தமிழக அரசியலை நன்கு புரிந்து கொண்டுள்ள ரஜினியின் நிதானம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 
 

click me!