
ஒமிக்ரான் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “ஒமிக்ரான் பரவி வருகிறது. நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒமிக்ரானை கண்டு பீதியடைய வேண்டாம். எச்சரிக்கையுடன் இருங்கள்.
அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடியுங்கள். நாட்டில் இதுவரை 90% மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இதுவரை 60% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
தற்போது 18 வயது மேற்படவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், வருகிற ஜனவரி 3-ந் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருவதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறி உள்ளார். அதேபோல் DNA மற்றும் மூக்கு வழியே போடப்படும் தடுப்பூசி முதன்முறையாக இந்தியாவில் விரைவில் செலுத்தப்பட உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.