இனிமேல் தமிழ் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமை இல்லை என்று கூறியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மூன்று புதிய சட்ட மசோதாக்களுக்கு ஹிந்தியில் பெயர் வைத்திருப்பது மொழி சர்வாதிகாரத்தை காட்டுகிறது. தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கு தார்மீக உரிமை இல்லை என்று தமிழ்நாடு முதல்வர் மு.க, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இந்திய குற்றவியல் சட்டத்திற்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு மாறாக பாரதிய சாக்ஷ்யா, இந்திய சாட்சிகள் சட்டத்திற்கு மாறாக பாரதிய நகரிக் சுரக்ஷா என பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா லோக்சபாவிதால் க்கல் செய்தார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான ஸ்டாலினின் ட்விட்டர் பதிவில், ''#Recolonisation in the name of #Decolonisation!என்று பதிவிட்டுள்ளார். பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய மசோதா ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை மத்திய அரசு சிதைத்துள்ளது. மத்திய பாஜக அரசு மேற்கொண்ட துணிச்சலான முயற்சி மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவமாகும்.
இது இந்தியாவின் ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் செயலாகும். இனிமேல் தமிழ் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமை இல்லை. தமிழ்நாட்டின் வரலாற்றின் பின்னணியில் தமிழ்நாடும், திமுகவும் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொண்டு மீண்டுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் தமிழ் மொழி அடையாளத்தை பாதுகாத்துள்ளோம்.
இந்தித் திணிப்பு என்ற புயலை நாம் இதற்கு முன்பு எதிர்கொண்டோம். அதை மீண்டும் தளராத மன உறுதியுடன் எதிர்கொள்வோம். இந்தி காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு நெருப்பு மீண்டும் எரிகிறது. இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்றும் பாஜகவின் துணிச்சலான முயற்சி உறுதியாக எதிர்க்கப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!
Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!