மம்தா..! மாயா..! மன்மோகன்..! பிரதமர் வேட்பாளர் யார்..? மே 21-ல் அறிவிக்கிறார் ராகுல்..!

By Asianet TamilFirst Published May 11, 2019, 9:54 AM IST
Highlights

பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக வர விடாமல் தடுக்க தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க ராகுல் காந்தி அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.

பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக வர விடாமல் தடுக்க தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க ராகுல் காந்தி அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.

கடந்த தேர்தலைப் போல் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிப் பொறுப்பை பெற முடியாது என்பதுதான் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் சிவசேனா அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது என்பதிலும் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. எனது கடைசி நேரத்தில் பிராந்தியக் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் தடுக்க என்ன செய்யலாம் என்று ராகுல் வியூகம் வகுத்து வருகிறார். 

இந்த நிலையில் தான் கடந்த வாரம் ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்து விட்டால் பிராந்திய கட்சிகளை ஒன்றிணைத்து முடிவுகள் வெளியான பிறகு கூட்டணி ஆட்சி அமைத்து விடலாம் என்று ஒரு யோசனையை கூறியுள்ளார்.

 

இந்த யோசனையை சிறப்பானதாக இருப்பதாகக் கருதிய ராகுல் காந்தி உடனடியாக அகமது பட்டேல் மூலமாக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரதமர் கனவில் இருக்கும் மாயாவதி, இது கட்சிகளில் காங்கிரசுக்கு பிறகு வலுவான கட்சியாக இருக்கும் திரிணாமுல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி ஆகிய இருவரில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விடலாம் என்று ராகுல்காந்தி அகமது படேலிடம் கூறியதாக சொல்கிறார்கள். 

ஆனால் அகமது பட்டேல் சோனியா காந்தி வழியில் ஏற்கனவே இரண்டு முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை பிரதமர் வேட்பாளராக முன்னேறியதன் மூலம் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ஒரு யோசனையை கூறியுள்ளார். மன்மோகன் சிங்கால் பிரதமர் வேட்பாளர் என்றால் மம்தாவும் மாயாவதியை வெளிப்படையாக எதிர்க்க முடியாது என்றும் அகமது பட்டேல் அவளுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

 

ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அதை நாமே தடுத்து நிறுத்தி விடக்கூடாது என்று அவர்கள் கூறியதாகவும் இதனைத் தொடர்ந்து மம்தா அல்லது மாயாவதி ஆகிய இருவரில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பாஜகவை ஆட்சியில் இருந்து மாற்றுவது குறித்து வரும் 21-ம் தேதி டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தேசிய அரசியலில் காங்கிரஸ் பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

click me!