வேலைக்காகதா பிளாஸ்மா சிகிச்சை? கைவிட மத்திய அரசு அதிரடி முடிவு..!

By vinoth kumarFirst Published May 16, 2021, 6:52 PM IST
Highlights

கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா சிகிச்சை முறையில் எந்த வித பலனும் இல்லை என்பதால் இந்த முறையை  கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா சிகிச்சை முறையில் எந்த வித பலனும் இல்லை என்பதால் இந்த முறையை  கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பூரணமாகக் குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்பு அணுக்கள்) இருக்கும். அவற்றைப் பிரித்தெடுத்து, நோய் பாதித்துள்ளவர்களின் உடலில் செலுத்தும்போது, அந்த ஆன்டிபாடிகள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி மேற்கொண்டு வைரஸை பெருகவிடாமல் கட்டுப்படுத்தும். இதுதான் பிளாஸ்மா தெரபி. இந்த ஆன்டிபாடியால் குணமடைந்த ஒருவர், மற்றவர்க்கு தன்னுடைய பிளாஸ்மாவை தானமாகத் தரலாம். அந்த வகையில் இதுவொரு தொடர் சிகிச்சை முறை. சென்ற வருடம் அமெரிக்கா, சீனா போன்ற பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த பிளாஸ்மா தெரபி அதன் பிறகு, இந்தியாவிலும் மேற்கொள்ளப் பட்டது.

இந்நிலையில், கொரோனா சிகிச்சை முறையில் பிளாஸ்மா சிகிச்சை முறை பயனுள்ளதாக உள்ளதா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பில் இருந்து குறைய வைப்பதிலோ? அல்லது உயிரிழப்பை குறையவைப்பதிலோ? பிளாஸ்மா சிகிச்சை முறையில் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டோரை குணப்படுத்துவதில் பிளாஸ்மா சிகிச்சை எந்த பங்கையும் அளிக்கவில்லை என்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை நிபுணர் குழுவினர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்துவதை கைவிட இந்திய மருத்துவ கவுன்சில் இன்னும் சில நாட்களில் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன.

click me!