இது அரசியல் இல்லை.. உயிர் காக்கும் விஷயம்.. கொரோனா செய்தியை மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியிடுங்கள்.. ஸ்டாலின்.!

By vinoth kumarFirst Published May 16, 2021, 6:28 PM IST
Highlights

மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியை ஒருசேர எதிர் கொண்டு வருகிறோம் எனவே கொரோனா உள்ளிட்ட செய்திகளை மிகுந்த எச்சரிக்கையுடன் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியை ஒருசேர எதிர் கொண்டு வருகிறோம் எனவே கொரோனா உள்ளிட்ட செய்திகளை மிகுந்த எச்சரிக்கையுடன் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தி ஆசிரியர்கள், காட்சி ஊடக ஆசிரியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்;- தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செய்து வருவதாகவும் இந்த ஒரு வார காலத்தில் 7800 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ரேஷன் கடைகளில் 2000, பால் விலை குறைப்பு, ஆக்சிஜன் உற்பத்தியை தீவிரப்படுத்தள், நோய் பரவலை கட்டுப்படுத்த மக்கள் விழிப்புணர்வு அவசியம் அதற்கு ஊடகத்தின் பங்களிப்பு மிக அவசியம் என்றும் முதல்வர் பேசினார். 

மேலும் கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது. கொரோனாவில் இருந்து அனைத்து பணியாளர்களையும் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியை ஒருசேர எதிர் கொண்டு வருகிறோம் எனவே கொரோனா உள்ளிட்ட செய்திகளை மிகுந்த எச்சரிக்கையுடன் ஊடகங்கள் வெளியிட வேண்டும்.

கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறது. எதையும் மறைக்க கூடாது என அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் நான் கூறியுள்ளேன். அரசின் செய்தியில் சந்தேகம் இருப்பின் விளக்கம் கேட்கலாம். அரசுக்கு ஆக்கபூர்வ ஆலோசனையை ஊடகங்கள் தெரிவிக்கலாம். செய்திகளில் கொரோனா விழிப்புணர்வு காட்சிப் பதிவுகளை வெளியிட வேண்டும். முகக் கவசம் அணியுமாறு தொலைக்காட்சியில் வலியுறுத்தலாம் என்றார்.

click me!