பிளாஸ்மா தானம்.. மதுரையை கலக்கும் மும்மூர்த்திகள்..! தயார் நிலையில் பிளாஸ்மா டோனர்கள்.!

By T BalamurukanFirst Published Jul 16, 2020, 8:55 PM IST
Highlights

கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டவர்களிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெற்று பலரது உயிர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள் மதுரையைச் சேர்ந்த மும்மூர்த்திகள்.இவர்களின் இந்த செயலுக்கு மக்கள் மத்தியிலும் மருத்துவர்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
 


கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டவர்களிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெற்று பலரது உயிர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள் மதுரையைச் சேர்ந்த மும்மூர்த்திகள்.இவர்களின் இந்த செயலுக்கு மக்கள் மத்தியிலும், மருத்துவர்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதே நேரம் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகமாகி இருப்பது நிம்மதி அளிக்கிறது. தற்போது வரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றுவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில், தான் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தை தானமாக பெற்று அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து எடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கபடுவோருக்கு அதிக அளவில் சிகிச்சை அளிக்க ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே தெரிவித்துள்ளார். கேரளாவிலும் பிளாஸ்மா சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை முறை பரவலாக்கப்பட்டு வருகிறது. 
இந்தசூழலில், கொரோனா தொற்றுக்குள்ளாகி  குணமடைந்தவர்களை திரட்டி அவர்களிடம் பிளாஸ்மா தானம் பெறும் முயற்சியில் மதுரையை சேர்ந்த தன்னார்வலர்களான வழக்கறிஞர் அன்புநிதி, இப்ராஹிம் சுல்தான் சேட்,  காதர் மொய்தீன் ஆகிய மூவர். இந்த மும்மூர்த்திகளை மதுரையைச் சேர்ந்த மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றார்கள்.முதல்கட்டமாக வெளியூரைச் சேர்ந்த மூன்று பேரை மதுரைக்கு அழைத்து வந்து பிளாஸ்மா தானம் கொடுக்க வைத்துள்ளார்கள்.

இது குறித்து வழக்கறிஞர் அன்புநிதியிடம் பேசும் போது..." கொரோனா ஊரடங்கு ஆரம்பித்த நாளில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு,ஊழியர்களுக்கு இது நாள் வரைக்கும் உணவு வழங்கி வருகிறோம்.அதனால் மருத்துவர்கள் ,ஊழியர்கள் எங்கள் மீது நல்ல நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.3 நபர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல முன்னேற்றம் கிடைத்தது. அப்போது தான் டீன் சங்குமணியிடம் பிளாஸ்மா குறித்து கேட்டோம். கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்ட 35 பேர்கள் பட்டியலை டீனிடம் இருந்து வாங்கினோம். அதில் 13 பேர் மட்டுமே தகுதியானவர்களாக இருந்தார்கள். பிளாஸ்மா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்மா கொடுப்பவர்களை தயார் செய்து மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான அனைத்து டெஸ்ட்களும் எடுத்த பிறகு தான் அவர்கள் உடலில் இருந்து ரத்தம் எடுக்கிறார்கள்.
பிளாஸ்மா எடுப்பதற்கான கிட் மதுரைக்கு இன்னும் வரவில்லை. வந்தால் நிறைய பேர்களிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெற்று தர நாங்கள் தயாராக இருக்கிறோம். கொரோனா பாதிப்பு மதுரையில் அதிகம். எங்களை பொருத்தவரை மக்கள் யாரும் கொரோனா தொற்றால் உயிரிழந்து விடக்கூடாது என்பது தான். அதே நேரத்தில் ஆக்ஜிசன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் கூடுதலாக மதுரையில் இல்லை. அதை அதிகரிக்க வேண்டும். உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா நல்ல ரிசலட் கொடுக்கிறது என்கிறார்.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் ரத்த தானம் செய்யும்படி வற்புறுத்தப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வு பணியில் நடிகர் விஜய் சேதுபதியும் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கருணையும் பச்சாதாபமும் இந்த நேரத்தில் அவசியமாக உள்ளது. எனவே கொரோனாவில் இருந்து குணமடைந்தவராக இருந்தால் தயவு செய்து பிளாஸ்மா தானம் செய்து கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு உதவி செய்யுங்கள். இதன்மூலம் ஒரு குடும்பத்தின் உயிரை உங்களால் காப்பாற்றலாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

click me!