#BREAKING வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!

By vinoth kumarFirst Published Oct 14, 2021, 4:21 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. ஆனாலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை.

வார இறுதி நாட்களான  வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயில்களை திறக்க பக்தர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. ஆனாலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இந்த 3 நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். கோயில்களை திறக்கக்கோரி பாஜகவினர் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை அன்று கோயில் திறக்கப்பட வேண்டும் என்று கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, முதல்வர் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் , மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர். அப்போது, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. இந்நிலையில், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மழலையர் நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

click me!