மருத்துவக்கல்லூரியில் படிக்க கிராமப்புற மாணவர்களுக்கு இடம்.. கட்டணம் அரசசே செலுத்தும். மகிழ்ச்சியில் மாணவர்கள்

By T Balamurukan  |  First Published Nov 24, 2020, 8:03 PM IST

அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு மாணவி நன்றி தெரிவித்துள்ளார்.


அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு மாணவி நன்றி தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos


புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகேயுள்ள மாங்காட்டை சேர்ந்தவர்கள் ரகு-விஜயலட்சுமி. கூலி தொழிலாளிகளான இவர்களது மகள் காயத்தரி. இவர் மாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதினார். இவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் தேர்வானார்.இவருக்கு அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. கூலி தொழிலாளிகளான இவர்களது பெற்றோர்களால் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் கேட்கும் தொகையை உரிய காலத்தில் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக பலரிடமும் கூறி வந்தனர். 
 
இந்நிலையில், இத்தகைய மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்து தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர். 

click me!