அதிதீவிர புயலாக மாறியது நிவர்... உச்சக்கட்ட பதற்றத்தில் தமிழகம்.. பேருந்தை தொடர்ந்து ரயில்களும் ரத்து..!

By vinoth kumarFirst Published Nov 24, 2020, 6:31 PM IST
Highlights

நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதால் தென்மாவட்டங்களுக்கான அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதால் தென்மாவட்டங்களுக்கான அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே நாளை மாலை கரையை கடக்க உள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். ஆகையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. அதேபோல், ஆம்னி பேருந்துள் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்த தென் மாவட்டங்கள் செல்லும் அனைத்து ரயில்களும் நாளை ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இரு மார்க்கங்களிலும் ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் செல்லும் 24 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணத்தொகை திருப்பி செலுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல், சென்னையில் நாளை காலை 10 மணி முதல் புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

click me!