இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கே.டி ராகவன், யூடியூப் மதன் மீது பியுஸ் மனுஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Published : Sep 09, 2021, 04:48 PM ISTUpdated : Sep 09, 2021, 04:53 PM IST
இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கே.டி ராகவன், யூடியூப் மதன் மீது பியுஸ் மனுஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சுருக்கம்

முன்னாள் பாஜக நிர்வாகியின் ஆபாச வீடியோ தொடர்பாக கே.டி ராகவன் மற்றும் யூடியூபர் மதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பியூஷ் மனுஷ் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 

முன்னாள் பாஜக நிர்வாகியின் ஆபாச வீடியோ தொடர்பாக கே.டி ராகவன் மற்றும் யூடியூபர் மதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பியூஷ் மனுஷ் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான பியூஷ் மனுஷ் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் மனுஷ், 

கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் மதன் ரவிசந்திரன் என்பவர் தனது சேனலில் முன்னாள் பாஜக நிர்வாகியான கே.டி ராகவனின் ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதாக அவர் கூறினார்.இந்த வீடியோ இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும்,  மதன் ரவிசந்திரன் இதே போல் 15 தலைவர்களின் 60க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் தன்னிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இந்துக்களை புண்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்  கே.டி ராகவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இதனால்  ஆபாச வீடியோ வெளியிட்ட யூடியூபர் மதன் மற்றும் இந்துக்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட கே.டி ராகவன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார். காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!