கள்ளச்சாராய வழக்கில் கைதானவருடன் கேக் ஊட்டி நெருக்கம்? வைரலான புகைப்படம்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் விளக்கம்.!

By vinoth kumarFirst Published May 18, 2023, 6:44 AM IST
Highlights

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கள்ளச்சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபருடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேக் ஊட்டி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார். 

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கைது நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக கவுன்சிலரின் கணவருமான மருவூர் ராஜா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராய வியாபாரி மருவூர் ராஜாவுக்கு  சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கேக் ஊட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனம் மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் மரூர் ராஜா மிக நெருக்கமாக இருந்துள்ளார். ஏன்? பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டாலும், அமைச்சரின் செல்வாக்கால், பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் தனது சாராய விற்பனையைத் தொடர்ந்து வந்திருக்கிறார். அவரை அமைச்சர் பதவியிலிருந்து  நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்;- சமூக விரோதிகள் தங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர, தொழிலை மாற்ற மாட்டார்கள். சமூக விரோதிகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்தப் பாகுபாடும் பார்க்காமல். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் அப்போதைய முதல்வர் இபிஎஸ் என்ன செய்தார்? துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சென்று கூட பார்க்கவில்லை. ஆனால், தற்போது முதல்வர் உடனே நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். திருமண நாள், பிறந்தநாள் போன்றவற்றுக்கு வாழ்த்து பெற வருகிறார்கள். பொது வாழ்வில் நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அது போன்ற புகைப்படம் தானே தவிர, வேறொன்றும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

click me!