
அதிமுகவில் ஜெயலலிதா பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டவர் P.H.பாண்டியன். அவரை தொடர்ந்து எம்.பியாக இருந்த அவரது மகன் மனோஜும் சசிகலா குடும்பத்திற்கு எதிராக செயல்பட்டவர்தான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னம்மா சசிகலா கட்சியிலிந்து நீக்கப்படுவதற்கு பி.எச்.பாண்டியன் குடும்பத்தினரும் முக்கிய காரணமாவார்கள்.
மீண்டும் லைம்லைட்டுக்கு வந்த சசிகலா P.H.பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியனை ஒட்டுமொத்தமாக ஓரம் கட்டினார்.
எந்த ஒரு பதவியும் இல்லாத அவர்கள் தொடர்ந்து கொந்தளிப்புடனே இருந்தனர்.
கடந்த மாதம் ஜெ. மரணமடைந்ததை தொடர்ந்து 30வது துக்க நாளையொட்டி நேற்று காலை 6 மணிக்கு P.H.பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அவருடன் வந்த ஒரு ஆதரவாளர் ஒரு தினசரி நாளிதழின் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.
P.H.பாண்டியன் மற்றும் அவரின் குடும்பத்தினர் அதிமுக தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் இனி அவர்கள் பொறுத்திருக்க மாட்டார்கள் என்றும் காட்டமாக தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்து 30 நாட்கள் வரை எதுவும் பேசக்கூடாது என்பதால் இவ்வளவு நாள் பொறுமை காத்ததாகவும் இனி P.H.பாண்டியன் மற்றும் அவரது மனோஜ் தனது அரசியல் வேலைகளை ஆரம்பிப்பார்கள் என்றார்.
பொறுத்திருந்து பார்க்கலாம் சசிகலாவிடம் சரண்டர் ஆகி விடுவார்களா? அல்லது அதிமுகவில் குழப்பத்தை எற்படுத்துவார்களா?