ஜெயலலிதா பிறந்த மேலேகோட்டாவில் மக்கள் சோகம்.. - ஏக்கத்தில் உறவினர்கள்...

First Published Jan 6, 2017, 10:57 AM IST
Highlights


திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்விகமாக கொண்ட முதலவர் ஜெயலலிதாவின்வின் முன்னோர்கள் மைசூர் சமஸ்தானத்தில் வேலை கிடைத்ததால் ஸ்ரீரங்கபட்டினத்தை அடுத்த மேலேகோட்டாவில் செட்டில் ஆனார்கள்.

மைசூர் மன்னரின் சமஸ்தானத்தில் முக்கிய அதிகாரியாக பணியாற்றியவர் ஜெயலலிதாவின் தாத்தா.

சட்டம் மற்றும் கணக்கு துறையில் சமஸ்தானத்திற்கு உதவிகள் செய்து வந்தவர்.

ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமன் மற்றும் தாய் சந்தியா ஆகியோரும் அங்குதான் வசித்தார்கள்.

இந்த மேலேகொட்டாவில்தான் ஜெ. பிறந்தார்.

பின்னர் இவர்கள் குடும்பம் பெங்களூருவில் குடிபெயர்ந்து பிரபல பிஷப் காட்டன் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை பயின்றார்.

பின்னர் நான்காம் வகுப்பிலிருந்து சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் சேர்ந்தார்.

ஜெயலலிதா பிறந்த மேலேகோட்டா கிராமத்தில் அவரது ஒன்று விட்ட சித்தப்பா மற்றும் தூரத்து உறவினர் இருக்கிறார்கள்.

பெங்களூருவில் அவரது ஒன்று விட்ட தங்கை மகள் அபர்ணா உள்ளிட்ட உறவினர்கள் வசித்து வருகின்றனர்.

அபர்ணாவும் அடிக்கடி மேலேகோட்டா சென்று வருவாராம்.

ஜெ. இறந்து 30வது நாளில் எஞ்சியிருக்கும் தூரத்து உறவுகள் அவரது சொந்த ஊரான மேலேகோட்டாவில் கூடி சடங்குகள் செய்தனராம்.

அப்போது அங்கு கிராம மக்கள் பலர் கூடி விட்டனராம். இதனால் ஜெயாலலிதா பிறந்த ஊரான மேலேகோட்டாவே சோகத்தில் மூழ்கி போனதாம்.

ஜெ அந்த கிராமத்தை விட்டு வெளியேறி 60 வருடங்களை கடந்த நிலையிலும் மேலேகோட்டா கிராம மக்கள் ஜெயலலிதா மீது பெருமதிப்பும் அன்பும் பாசமும் வைத்திருப்பதாக தெரிவிக்கிறார். அவரது உறவினர் அபர்ணா.

click me!