அடுத்த ஷாக்…. ரெடி ஆகிக்கோங்க மக்களே…. பெட்ரோல், டீசல் விலை செமையா உயரப் போகுது !!

First Published May 18, 2018, 6:24 AM IST
Highlights
petrol diesel price will be hikew upto 4 Rupees


கர்நாடக மாநில தேர்தலையொட்டி கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரை பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது விலை விண்ணை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாய் 50 காசுகளும் உயர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே உள்ளது. இதனிடையே கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமமாக  கடந்த மாதம் 24-ந்தேதி முதல் கடந்த 13-ந்தேதி வரை 19 நாட்கள் விலையை ஏற்றவில்லை.

இந்த நிலையில் தேர்தல் கடந்த 12-ந்தேதி முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 14-ந்தேதியில் இருந்து மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை உயர தொடங்கியது.

கடந்த 14-ந்தேதி முதல் நேற்று வரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 73 காசும், டீசல் விலை 93 காசும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 23 காசு உயர்ந்து, 78 ரூபாய் 16 காசுக்கும், டீசல் 24 காசு உயர்ந்து 70 ரூபாய் 40 காசுக்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ரூ.4 வரையிலும், டீசல் விலையை ரூ.3 முதல் 3 ரூபாய் 50 காசு வரையிலும் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வதாலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து இருப்பதாலும் விலை உயர்த்தப்பட உள்ளதாக  கூறி வந்த எண்ணெய் நிறுவனங்கள், தற்போது கர்நாடக தேர்தலுக்காக 19 நாட்கள் விலை ஏற்றாமல் இருந்ததை சமாளிக்க இந்த விலை உயர்வை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

click me!