கோவை பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்து கொண்டு இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை சித்தாபுதூர் பகுதியில் நேற்று இரவு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. அப்போது கட்சி பிரமுகர்கள் சிலர் தரைத்தளத்திற்கு முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த பாட்டிலை தூக்கி, கட்சி அலுவலகத்தை நோக்கி வீசிவிட்டு வேகமாக தப்பிச் சென்றனர். பாஜக அலுவலகத்திற்கு அருகே உள்ள மின்கம்பம் மீது விழுந்தது இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை, இதனால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. இதே போல கோவை ஒப்பணக்கார தெருவில் உள்ள துணிக் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.
கோவை பாஜக அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கோயம்புத்தூர் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. நமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் விரோதமான இந்த சக்திகளுக்கு எதிராக கடுமையாகப் போராடுவதற்கான நமது உறுதியை இந்த சம்பவம் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
Govt, people are watching the law & order of our state hitting new bottom every day! கோயம்புத்தூர் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.
(2/3)
மேலும் திமுக அரசின் ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நாளுக்கு நாள் புதிய அடித்தளத்தை எட்டுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என கூறியுள்ளார். இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக அரசு உணர வேண்டும் என அந்த பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்