“தினந்தோறும் விலை நிர்ணயத்தை திரும்ப பெற வேண்டும்" - தர்மேந்திர பிரதானிடம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வலியுறுத்தல்...

Asianet News Tamil  
Published : Jun 14, 2017, 05:51 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
“தினந்தோறும் விலை நிர்ணயத்தை திரும்ப பெற வேண்டும்" - தர்மேந்திர பிரதானிடம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வலியுறுத்தல்...

சுருக்கம்

petrol and teasel rate is fixed in daily issue is vabus by petrol bunk owners

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.

பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து அவ்வபோது பெட்ரோல் டீசல் விலையை மாற்றி அமைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு வந்தன.

இதைதொடர்ந்து தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

நாளை மறுநாள் முதல், தினசரி விலை நிர்ணயிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தற்போது, பெட்ரோல் பங்க்கில்  ஐந்து நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருப்பு வைக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

இந்நிலையில், தினசரி பெட்ரோல் விலை நிர்ணயிக்கும் போது, விலை உயர்வு அல்லது குறையும் போது, பங்க் உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள்  பாதிக்கபடுவார்கள்.

எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்புக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், வளர்ந்த நாடுகளிலும் நடைமுறையை பின்பற்றுவது கடினம் எனவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!