அதிமுகவுக்கு ரொம்ப குடைச்சல் கொடுக்கும் ஆர்.எஸ்.பாரதி ஃபஸ்ட் டார்கெட்... ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு..!

By vinoth kumarFirst Published May 27, 2020, 12:11 PM IST
Highlights

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து  செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து  செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக  ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை கடந்த 23ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

விசாரணைக்குப் பின்னர் அவர் எழும்பூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆர்.எஸ்.பாரதி பேசியது பற்றிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி நிர்மல் குமார் இன்று விசாரணை நடத்த உள்ளார். மேலும், சரண் அடையும் நாளிலேயே தனது ஜாமீன் மனுவை பரிசீலிக்க கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

click me!