அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு... தேர்தல் நேரத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு!

By Asianet Tamil  |  First Published Apr 8, 2019, 9:42 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே உள்ள பெரியார் சிலையை மர்ம ஆசாமிகள் இரவில் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் அரசு மருத்துவமனை அருகே பெரியார் சிலை உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக இந்தச் சிலை துணியால் மூடப்பட்டிருந்தது. பின்னர் அந்த சிலை மீது மூடப்பட்டிருந்த துணியை அகற்ற தேர்தல் அதிகாரி அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் பெரியார் சிலையின் தலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு கீழே சாய்க்கப்பட்டிருந்தது.


காலையில் பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டவர்கள் திராவிடர் கழகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த இடத்தில் திராவிடர் கழகத்தினரும் பெரியார் மீது பற்றுள்ளவர்களும் குவிந்தனர். சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோஷம் எழுப்பினர். இதனையடுத்து அங்கே போலீஸார் குவிக்கப்பட்டனர். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களிடன் போலீஸார் விசாரணையத் தொடங்கியுள்ளனர்,

Tap to resize

Latest Videos


 இந்தச் சம்பவம் புதுக்கோட்டையிலும் அறந்தாங்கியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்தச் சிலை உடைக்கப்பட்டிருப்பதால், பெரிய பரபரப்பை ஏற்பட்டுள்ளது.  

click me!