வரலாறு தெரியாம உளறாதீங்க ரஜினி... தமிழருவி மணியனிடம் கேட்டு தெரிஞ்சிக்கோங்க... டிடிவி.தினகரன் அட்வைஸ்..!

By vinoth kumarFirst Published Jan 24, 2020, 11:18 AM IST
Highlights

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது கண்டனத்திற்கு உரிய செயல். தமிழர் நலனுக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த மாபெரும் தலைவர் பெரியார் குறித்து பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய தலைவர்கள் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து உண்மை தன்மை கேட்டறிந்து நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கலாம்.

பெரியார் விவகாரத்தில் தமிழருவி மணியன் போன்றோரிடம் விவரம் கேட்டறிந்து ரஜினி பேசியிருக்கலாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். 

துக்ளக் பத்திரிகை பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ராமர்-சீதை நிர்வாண சிலைக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ரஜினி பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகையிடப்படும் என பல்வேறு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், எதுவுக்கும் ரஜினி அஞ்சவில்லை. இதுதொடர்பாக ரஜினி கூறுகையில்;- தான் பேசியது உண்மை என்றும் எதையும் கற்பனையாக தெரிவிக்கவில்லை. தான் யாரிடமும் மன்னிப்பு கோர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது கண்டனத்திற்கு உரிய செயல். தமிழர் நலனுக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த மாபெரும் தலைவர் பெரியார் குறித்து பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய தலைவர்கள் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து உண்மை தன்மை கேட்டறிந்து நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கலாம். பெரியார் விவகாரத்தில் தமிழருவி மணியன் போன்றோரிடம் விவரம் கேட்டறிந்து ரஜினி பேசியிருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும், பேசிய அவர் சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் இணைவார் என வதந்தி கிளப்புகின்றனர். நானோ என் சித்தியோ அவர்களுடன் இணைய வாய்ப்பு இல்லை. அமமுகவை கண்டு அதிமுகவுக்கு பயம் வந்துள்ளது. பதவி பணத்தை எதிர்பார்த்து வந்தவர்கள் போய் விட்டனர். உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அமமுக ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

click me!